தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1514

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

குழந்தையின் காதில் (பிறந்தவுடன்) பாங்கு கூறுதல்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்த செய்தியாகும்…

 

(திர்மிதி: 1514)

بَابُ الأَذَانِ فِي أُذُنِ المَوْلُودِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَا: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ قَالَ:

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَالعَمَلُ فِي العَقِيقَةِ عَلَى مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَيْرِ وَجْهٍ «عَنِ الغُلَامِ شَاتَانِ مُكَافِئَتَانِ، وَعَنِ الجَارِيَةِ شَاةٌ» وَرُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْضًا أَنَّهُ «عَقَّ عَنِ الْحَسَنِ بِشَاةٍ» وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ العِلْمِ إِلَى هَذَا الحَدِيثِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1436.
Tirmidhi-Shamila-1514.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1432.




إسناد ضعيف فيه عاصم بن عبيد الله القرشي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20423-ஆஸிம் பின் உபைதுல்லாஹ் என்பவர் பற்றி
  • இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களும்,
  • எதற்கும் தகுதியில்லாதவர் என்று இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்களும்,
  • இவரது தகவல் மறுக்கப்பட வேண்டியது என்று இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும்,
  • இவரை ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்களும் கூறியுள்ளார்கள்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/254) 

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் அபூராஃபிஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஆஸிம் பின் உபைதுல்லாஹ் —> உபைதுல்லாஹ் பின் அபூராஃபிஃ —> அபூராஃபிஃ (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1013 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7986 , அஹ்மத்-23869 , 27186 , 27194 , அபூதாவூத்-5105 , திர்மிதீ-1514 , முஸ்னத் பஸ்ஸார்-3879 , அல்முஃஜமுல் கபீர்-931 , 2578 , ஹாகிம்-4827 , குப்ரா பைஹகீ-19303 , ஷுஅபுல் ஈமான்-8252 ,

  • ஆஸிம் பின் உபைதுல்லாஹ் —> அலீ பின் ஹுஸைன் —> அபூராஃபிஃ (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-9262579 ,


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஃபவாயித் தம்மாம்-333 .

فوائد تمام (1/ 147)

333 – أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، ثنا أَبُو شُعَيْبٍ الْحَرَّانِيُّ، ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الْأُمَوِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ حَفْصٍ الْعُمَرِيِّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حِينَ وُلِدَا»

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தம்மாம் பின் முஹம்மத் (நூலாசிரியர்)

2 . அபூஅலீ-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ்.

3 . அபூஷுஐப்

4 . உபைதுல்லாஹ் பின் அம்ர்

5 . காஸிம் பின் ஹஃப்ஸ்

6 . அப்துல்லாஹ் பின் தீனார்.

7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-4434-அபூஅலீ யாரென அறியப்படாதவர் ஆவார்.
  • மேலும் இதில் வரும் ராவீ-34031-காஸிம் பின் ஹஃப்ஸ்-காஸிம் பின் அப்துல்லாஹ் பின் உமர் என்பவர் பற்றி இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும்; கைவிடப்பட்டவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்:  தஹ்தீபுத் தஹ்தீப்-3/413)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


3 . ஹஸன் பின் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6780 .

4 . ஹுஸைன் பின் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6780 .

5 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-8255 .


அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இந்தக் கருத்தில் ஷுஅபுல் ஈமானில் இடம்பெற்றுள்ள, இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் ஒரு செய்தியின் அடிப்படையில் இந்தச் செய்தியை ஹஸன் தரம் என்று ஆரம்பத்தில் கூறியிருந்தார். பிறகு அதில் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்கள் இடம்பெற்றிருப்பதால் இந்த செய்தியை ஹஸன் என்று கூறியதை வாபஸ் வாங்கிவிட்டு பலவீனமானது என்று கூறியுள்ளார்.

(பார்க்க: அள்ளயீஃபா-6121, தராஜுஆதுல் அல்பானீ-23, பக்-11)


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.