தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-807

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)

(திர்மிதி: 807)

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-807.
Tirmidhi-Shamila-807.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-734.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28478-அதாஉ பின் அபூ ரபாஹ் அவர்கள், ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்-3/103, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/348)

وقال علي ابن المديني : رأى أبا سعيد يطوف بالبيت ولم يسمع منه ، ورأى عبد الله بن عمر ولم يسمع منه ، ولم يسمع من زيد بن خالد الجهني ، ولا من أم سلمة ، ولا من أم هانئ ، ولا من أم كرز شيئا

تحفة التحصيل في المراسيل: (1 / 348)

1 . இந்தக் கருத்தில் அதாஉ —> ஸைத் பின் காலித் (ரலி) வழியாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும்.

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7905 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19555 , அஹ்மத்-17033 , 17044 , 21676 , தாரிமீ-1744 , இப்னு மாஜா-1746 , திர்மிதீ-807 , முஸ்னத் பஸ்ஸார்-3775 , இப்னு குஸைமா-2064 , இப்னு ஹிப்பான்-3429 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1048 , ஷுஅபுல் ஈமான்-3666 , …

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும்.

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-11449 ,

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும்.

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-5818 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7906 , 7908 ,

4 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும்.

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-7136 , 8438 , குப்ரா நஸாயீ-3318 ,

மேலும் 5. ஸல்மான் ஃபார்ஸீ (ரலி), 6. ஜாபிர் (ரலி), 7. இப்னு மஸ்வூத் (ரலி) போன்றோர் வழியாக வரும் செய்திகளும் பலவீனமானவையாகும்.

  • மேற்கண்ட செய்தியை தற்கால அறிஞர்களில் சிலர் ஆய்வு செய்து பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
  • திர்மிதீ, இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    பகவீ, அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் போன்ற இன்னும் பல அறிஞர்கள் இதை சரியான செய்தி என்று கூறியுள்ளனர். சிலர் ஹஸன் என்று கூறியுள்ளனர்.
  • ஹதீஸ் பலவீனமானது என்றாலும் நோன்பாளிக்கு உணவளிப்பது தர்மம் என்ற வகையில் நன்மையான செயலாகும். அதற்கேற்ற கூலியை அல்லாஹ் வழங்குவான் என்பதில் சந்தேகமில்லை.

பார்க்க :

…நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்- 2 : 272 )

மேலும் பார்க்க : புகாரி-2890 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.