தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-3318

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

3318. யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

அதாஉ பின் அபூ ரபாஹ் (ரஹ்)

அதாஃ-அல்மக்கீ (ரஹ்) – 'Ata' bin Abi Rabah

இறப்பு: ஹிஜ்ரி 114, மக்கா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அதா பின் அஸ்லம்

தந்தை பெயர்: அஸ்லம்

வம்சம்: அல்குரஷீ, மவ்லா

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 27, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 114, மக்கா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அதா பின் அபூ ரபாஹ் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 27ல் மக்காவில் பிறந்தார்கள். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். மக்காவின் முஃப்தியாகவும், ஹதீஸ் கலையில் மிகப் பலமானவராகவும் திகழ்ந்தார்.

அபூ முஹம்மத் என்பது இவரின் குன்யா ஆகும். இவர் ஹிஜ்ரி 114ல் மக்காவில் மரணித்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், முஆவியா பின் அபூ ஸுஃப்யான், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸைத் பின் அர்கம், அபூ ஹுரைரா, ஆயிஷா பின்த் அபூ பக்ர், உம்மு ஸலமா, உம்மு ஹானீ பின்த் அபூ தாலிப், உர்வா பின் அஸ்ஸுபைர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): யஃகூப் பின் அதா, முஜாஹித் பின் ஜப்ர், அஸ்ஸுஹ்ரீ, அய்யூப் அஸ்ஸக்தியானீ, முஹம்மத் பின் முஸ்லிம் பின் தத்ரஸ், அல்கம் பின் உதைபா, ஸுலைமான் அல்அஃமஷ், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், அம்ர் பின் தீனார், இப்னு இஸ்ஹாக், அபூ ஹனீஃபா

வேறு பெயர்கள்: அதா பின் அபூ ரபாஹ், அதா பின் அஸ்லம்


ஆதாரம்: muslimscholars.info (11029) · Should verify


أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ قَالَ: أَخْبَرَنَا حُسَيْنٌ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-3318.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-3237.



  • இது பலவீனமான மவ்கூஃபான செய்தியாகும்.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28478-அதாஉ பின் அபூ ரபாஹ் (ரஹ்) அவர்கள், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது நேரடியாக கேட்டதாக அறிவித்தாலே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் கூறியதாக அஸ்ரம் அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/101) 

وروى الأثرم عن أحمد ما يدل على أنه كان يدلس ، فقال في قصة طويلة : ورواية عطاء عن عائشة لا يحتج بها إلا أن يقول : سمعت

تهذيب التهذيب: (3 / 101)

   . மேலும் பார்க்க : திர்மிதீ-807

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.