தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-9744

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நோன்பாளி நோன்புத் துறக்கும் போது என்ன கூறவேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்கள், “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃப ஸும்து, வ ரஸகனீ ஃப அஃப்த்தர்து (பொருள்: நான் நோன்பு வைக்கவும், நோன்புத் துறக்க உணவளித்தும் உதவி செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்) என்று கூறுவார்கள்.

 

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 9744)

مَا قَالُوا فِي الصَّائِمِ إِذَا أَفْطَرَ مَا يَقُولُ؟

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَامَ ثُمَّ أَفْطَرَ، قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»

قَالَ: وَكَانَ الرَّبِيعُ بْنُ خُثَيْمٍ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَعَانَنِي فَصُمْتُ وَرَزَقَنِي فَأَفْطَرْتُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-9744.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-9531.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-2358 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.