தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1619

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!’ என்று பதிலளித்தார்கள்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மற்ற) இஸ்லாமிய சன்மார்க்க நெறிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர், ‘உங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீது சத்தியமாக! நான் (இவற்றில்) எதனையும் கூடுதலாகச் செய்யமாட்டேன். அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ளவற்றில் எதனையும் நான் குறைக்கவுமாட்டேன்’ என்று கூறிவிட்டுத் திரும்பிச் செல்லலா)னார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்” அல்லது “அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1619)

أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ نَافِعِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ،

أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَائِرَ الرَّأْسِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَاذَا فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصَّلَاةِ؟ قَالَ: «الصَّلَوَاتِ الْخَمْسَ، وَالصِّيَامَ»، فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَائِعِ الْإِسْلَامِ، فَقَالَ: وَالَّذِي أَكْرَمَكَ لَا أَتَطَوَّعُ شَيْئًا، وَلَا أَنْقُصُ مِمَّا فَرَضَ اللَّهُ عَلَيَّ “. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ وَأَبِيهِ إِنْ صَدَقَ – أَوْ دَخَلَ الْجَنَّةَ وَأَبِيهِ إِنْ صَدَقَ -»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1619.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1547.




  • அபூஸுஹைல்-நாஃபிஉ பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் இஸ்மாயீல் பின் ஜஃபர் அவர்களின் சில அறிவிப்பில் மட்டுமே ‘அவருடைய தந்தை மீதாணையாக!” என்ற வார்த்தை வந்துள்ளது.
  • அபூஸுஹைல்-நாஃபிஉ பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாம், அப்துல்லாஹ் பின் மஸ்லமா போன்றோரின் அறிவிப்பிலும், இஸ்மாயீல் பின் ஜஃபர் அவர்களின் சில அறிவிப்பிலும் “அவருடைய தந்தை மீதாணையாக!” என்ற வார்த்தை இடம்பெறவில்லை. எனவே இந்த அறிவிப்பாளர்தொடர் ஷாத் என்ற வகையில் பலவீனமானதாகும்.
  • சிலர் எழுத்தில் ஏற்பட்ட தவறு என்றும் கூறியுள்ளனர்.

சிலர் இதை சரியானது என்று வைத்துக்கொண்டாலும் “தந்தையின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்ற தடை வருவதற்கு முன் உள்ள நிகழ்வு என்பதால் இது தவறில்லை என்றும், அல்லது இந்த சத்தியம், பேச்சு வழக்கில் உள்ள (மனம் விரும்பி செய்யாத) வீணான சத்தியம் என்றும் விளக்கம் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க : புகாரி-46 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.