தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-46

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35

ஸகாத் இஸ்லாத்தின் ஓர் அம்சமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: அசத்திய வழிகளிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தில் சாய்ந்தவர்களாகவும் தமது எண்ணத்தை இறைவனுக்காகத் தூய்மையாக்கியவர்களாகவும் அல்லாஹ்வை வணங்கவேண்டும்; தொழுகையை அவர்கள் நிலைநிறுத்திவரவேண்டும்; ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்று மட்டும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. மேலும் அதுவே நேரான மார்க்கமுமாகும். (98:5).

‘நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்’ என்றார்கள்.

உடனே அவர் ‘அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை’ என்றார்கள். அடுத்து ‘ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் ‘அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமையுண்டா?’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை’ என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் ‘அதைத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை’ என்றார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றார். அப்போது ‘இவர் கூறியதற்கேற்ப நடந்தால் வெற்றியடைந்துவிட்டார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) அறிவித்தார்.
Book : 2

(புகாரி: 46)

بَابٌ: الزَّكَاةُ مِنَ الإِسْلاَمِ

وَقَوْلُهُ: {وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلاَةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ القَيِّمَةِ} [البينة: 5]

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ:

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلاَ يُفْقَهُ مَا يَقُولُ، حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي اليَوْمِ وَاللَّيْلَةِ». فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَطَوَّعَ». قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَصِيَامُ رَمَضَانَ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَطَوَّعَ». قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَطَوَّعَ». قَالَ: فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَفْلَحَ إِنْ صَدَقَ


Bukhari-Tamil-46.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-46.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
this is test 5 letters to : « copy : « paste something Allah




1 . இந்தக் கருத்தில் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஸுஹைல்-நாஃபிஉ பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    —> மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    பின் அபூஆமிர் —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) 

பார்க்க: மாலிக்-485 , அஹ்மத்-1390 , தாரிமீ-1619 , புகாரி-46 , 1891 , 2678 , 6956 , முஸ்லிம்-8 , 9 , அபூதாவூத்-391 , 392 , 3252 , நஸாயீ-458 , 2090 , 5028

  • அபூஸுஹைல்-நாஃபிஉ பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    —> புகைர் பின் அப்துல்லாஹ்—> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) 

பார்க்க: குப்ரா பைஹகீ-4134 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.