தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1506

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1506.  அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று உரையாற்றும்போது, “ நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவு செய்த பின்,

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன். அஹ்லுந் நிஅமத்தி வல்ஃபள்லி வஸ்ஸனாஇல் ஹசன். லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்”

(பொருள்: அல்லாஹவைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. வழிபாட்டை முற்றிலும் அவனுக்கே உரித்தாக்குகிறோம் (அவனது திருப்திக்காகவே அனைத்து அறங்களையும் செய்கிறோம்); இறைமறுப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே) அருட்கொடைகள் அவனுக்கே உரியன. மாட்சிமை அவனுக்கே உரியது. அழகிய கீர்த்தியும் அவனுக்கே உரியது. அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ (எவராலும்) இயலாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வழிபடமாட்டோம்)

என்று கூறுவார்கள் என அறிவித்தார்கள்.

(அபூதாவூத்: 1506)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ:

سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، عَلَى الْمِنْبَرِ يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا انْصَرَفَ مِنَ الصَّلَاةِ، يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ، وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ، أَهْلُ النِّعْمَةِ وَالْفَضْلِ وَالثَّنَاءِ الْحَسَنِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ، وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1506.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1290.



மேலும் பார்க்க : முஸ்லிம்-1041 .

1 comment on Abu-Dawood-1506

  1. அஸ்ஸலாமு அலைக்கும், கீழ்காணும் செய்தியின் தரம் தேவை,

    ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் கூறியதாவது:
    நான் தியாகத் திருநாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று தொழுகைத் திடலில் (அல் முஸல்லா) அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் (தொழுகையில்) கலந்துகொண்டேன். நபி அவர்கள் (தொழுது முடித்து) தமது (பெருநாள்) உரையை முடித்ததும், சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கினார்கள்.
    பின்னர் நபி அவர்களிடம் செம்மறியாட்டுக் கடா ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது
    அதை அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்…) (அறுக்கிறேன்.) வல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்.) “இது என் சார்பாகவும், என் சமுதாயத்தாரில் குர்பானி கொடுக்க(இயல)ாதவர்கள் சார்பாகவும்” என்று கூறி தமது கையால் அறுத்தார்கள்.

    அபுதாவூத் 2427. Sunan Abi Dawud 2810

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.