பாடம்: 18
வலது கையால் சுத்தம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.
உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்.
கழிப்பிடம் சென்றால் பிறவி உறுப்பை வலது கையால் தொட வேண்டாம்.
தம் வலது கையால் சுத்தம் செய்யவும் வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
அத்தியாயம்: 4
(புகாரி: 153)بَابُ النَّهْيِ عَنْ الِاسْتِنْجَاءِ بِاليَمِينِ
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ هُوَ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا أَتَى الخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ»
Bukhari-Tamil-153.
Bukhari-TamilMisc-153.
Bukhari-Shamila-153.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சட்ட சுருக்கம்:
பானங்கள் அருந்தும்போதும், சாப்பிடும்போது அவற்றில் மூச்சுவிடக் கூடாது என்றும் ஊதக்கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்ததாக பல நபிமொழிகள் உள்ளன.
இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகளில் சிலவற்றில் உள்ள வாசக அமைப்பு இதற்கு மாற்றமான கருத்துப் போன்றதை தருகிறது. (பார்க்க: முஸ்லிம்-4126) அதாவது நபி (ஸல்) அவர்கள் பானங்கள் அருந்தும்போது பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை மூச்சுவிட்டுக் கொள்வார்கள் என்று வந்துள்ளது.
பானங்கள் அருந்தும்போது, அருந்தும் பாத்திரத்தை வாயிலிருந்து அகற்றிவிட்டு மூச்சுவிட்டுக் கொள்ள வேண்டும் என்று மற்ற ஹதீஸ்கள் இருப்பதால் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திக்கும் இந்தப் பொருளையே சில அறிஞர்கள் குறிப்பிட்டு இரண்டுவகை செய்திகளும் முரண்படவில்லை என்று கூறியுள்ளனர்.
வேறுசிலர், இரண்டும் முரண்படுகிறது என்ற அடிப்படையில் தடையாக வந்துள்ள செய்தியை மக்ரூஹ் தன்ஸீஹ்-வெறுப்புக்குரிய செயல் என்றும், சில காரணங்களால் மூச்சுவிட்டுக்கொள்வதும், ஊதிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.
ஒரு செயலுக்கு தடையும், அனுமதியும் இருக்கும்போது தடை செய்தியை ஹராம் அல்ல-முற்றிலும் விலக்கப்பட்டதல்ல என்று குறிப்பிடுவதற்கு இவ்வாறு மக்ரூஹ் தன்ஸீஹ் என்று ஃபிக்ஹ் கலை அறிஞர்கள் கூறுவார்கள்.
வணக்க வழிபாடுகள் அல்லாத நற்பண்புகள், உலகவிசயங்கள் விசயத்தில் கூறப்படும் சில தடைகளை இவ்வாறே ஃபிக்ஹ் கலை அறிஞர்கள் கூறுவார்கள்.
(என்றாலும் இந்தச் சட்டத்தில் முதல் கருத்தே சரியானதாகும்)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
இந்தச் செய்தியின் 3 பகுதிகளையும் சிலர் சேர்த்து அறிவித்துள்ளனர். சிலர், சில பகுதியை மட்டும் அறிவித்துள்ளனர்…
முதல் பகுதியின் கருத்தில் வந்துள்ள செய்திகள்:
1 . இந்தக் கருத்தில் அபூகதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-153 , 154 , 5630 , முஸ்லிம்-443 , 445 , 4124 , இப்னு மாஜா-, அபூதாவூத்-, திர்மிதீ-, நஸாயீ-, …
…முஸ்லிம்-444 ,
2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-2677 .
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1888 .
4 . அபூஹுரைரா
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-4126 ,
சமீப விமர்சனங்கள்