தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-154

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 19

சிறுநீர் கழிக்கும்போது வலக்கரத்தால் பிறவி உறுப்பைப் பிடிக்கக்கூடாது. 

154.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அதைத் தொடவேண்டாம்.

இன்னும் வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம்.

(ஏதேனும் பானம் குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்.

அறிவிப்பவர்: (ரலி)

அத்தியாயம்: 4

அபூகதாதா (ரலி)

أبو قتادة الأنصاري

இறப்பு: மதீனாவில் ஹிஜ்ரி 54

தரம்: நபித்தோழர்


விபரங்கள்

இயற்பெயர்: ஹாரிஸ் பின் ரப்ஈ

தந்தை பெயர்: ரப்ஈ பின் பல்தமா

வம்சம்: அன்ஸாரி, கஸ்ரஜ், பனூ ஸலிமா

புனைப்பெயர்: அபூகதாதா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா

பிறப்பு: மதீனா

இறப்பு: மதீனாவில் ஹிஜ்ரி 54

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூகதாதா ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். இவருடைய பெயர் ஹாரிஸ் பின் ரப்ஈ ஆகும். நுஃமான் அல்லது அம்ர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவர் நபி (ஸல்) அவர்களின் குதிரைப்படை வீரராக இருந்தார். உஹது, அகழ் போர் மற்றும் பல போர்களில் கலந்துகொண்டார். ஹிஜ்ரி 54 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), முஆத் பின் ஜபல்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸாபித் பின் அபூகதாதா, அப்துல்லாஹ் பின் அபூகதாதா, நாஃபிஉ பின் அப்பாஸ், அம்ர் பின் ஸுலைம், அப்துல்லாஹ் பின் ரபாஹ், அப்துர்ரஹ்மான் பின் கஅப் பின் மாலிக், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், அப்துல்லாஹ் பின் மஅபத், முஹம்மத் பின் ஸீரீன், நுப்ஹான் அபூ ஸாலிஹ்

வேறு பெயர்கள்: ஹாரிஸ் பின் ரப்ஈ, நுஃமான் பின் ரப்ஈ, அம்ர் பின் ரப்ஈ


ஆதாரம்: muslimscholars.info (391) · Should verify


بَابٌ: لاَ يُمْسِكُ ذَكَرَهُ بِيَمِينِهِ إِذَا بَالَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَأْخُذَنَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَسْتَنْجِي بِيَمِينِهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ»


Bukhari-Tamil-154.
Bukhari-TamilMisc-154.
Bukhari-Shamila-154.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



மேலும் பார்க்க: புகாரி-153 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.