அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன பிரார்த்தனை செய்து -கேட்க- வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.
(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 25505)حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ، قَالَ: أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ لَوْ أَنِّي عَلِمْتُ لَيْلَةَ الْقَدْرِ، مَا كُنْتُ أَدْعُو بِهِ رَبِّي عَزَّ وَجَلَّ، أَوْ: مَا كُنْتُ أَسْأَلُهُ؟ قَالَ: ” قُولِي: اللَّهُمَّ إِنَّكَ تُحِبُّ الْعَفْوَ، فَاعْفُ عَنِّي
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-25505.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24936.
إسناد شديد الضعف فيه علي بن عاصم التميمي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30022-அலீ பின் ஆஸிம் பின் ஸுஹைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர்; அந்த தவறை ஏற்றுக்கொள்ளாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
- சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், முன்கருல் ஹதீஸ் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/173)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர். தவறை ஏற்காமல் பிடிவாதம் கொண்டவர், ஷீயா கொள்கையுடைவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-4792)
மேலும் பார்க்க : திர்மிதீ-3513 .
சமீப விமர்சனங்கள்