ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌
லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் ஹானிஃ (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 29187)حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذُرَيْحٍ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
«لَوْ عَرَفْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا سَأَلْتُ اللَّهَ فِيهَا إِلَّا الْعَافِيَةَ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29187.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-28614.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபூமுஆவியா சில நேரம் தத்லீஸ் செய்பவர் என்று யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் அவ்வாறே கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/551)
இந்த செய்தியில் அபூஇஸ்ஹாக் ஷைபானீ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- மேலும் இது மவ்கூஃபான செய்தி.
மேலும் பார்க்க : திர்மிதீ-3513 .
சமீப விமர்சனங்கள்