தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-29189

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌

29189. லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் அதிகமாக மன்னிப்பையும், உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)

عبد الله بن بريدة بن الحصيب

இறப்பு: ஹிஜ்ரி 115, மர்விலுள்ள ஜாவரூஸா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் புரைதா பின் அல்குஸைப்

தந்தை பெயர்: புரைதா பின் அல்குஸைப்

வம்சம்: அல்அஸ்லமீ

புனைப்பெயர்: அபூ ஸஹ்ல்

ஊர் பெயர்: மர்வ்

பயணித்த ஊர்கள்: மர்வ், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 15

இறப்பு: ஹிஜ்ரி 115, மர்விலுள்ள ஜாவரூஸா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் புரைதா ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டு உமர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் பிறந்தார். இவர் மர்வ் நகரின் நீதிபதியாகப் பணியாற்றினார்.

இவர் பலமானவர் என அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் ஹிஜ்ரி 115 ஆம் ஆண்டு மர்விலுள்ள ஜாவரூஸா எனும் கிராமத்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): புரைதா பின் அல்குஸைப், இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ், இப்னு மஸ்ஊத், அபூ மூஸா அல்அஷ்அரீ, அபூ ஹுரைரா, ஆயிஷா பின்த் அபூபக்ர், ஸம்ரா பின் ஜுன்துப், இம்ரான் பின் ஹுஸைன், முஆவியா பின் அபூஸுஃப்யான், அல்முகீரா பின் ஷுஃபா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹுஸைன் பின் வாகித், கதாதா, மாலிக் பின் மஃகூல், முஹாரிப் பின் திஸார், மத்ர் பின் தஹ்மான் அல்வர்ராக், ஸயீத் பின் இயாஸ் அல்ஜரீரீ, அப்துல்லாஹ் பின் அதாஅ, அப்துல்லாஹ் பின் முஸ்லிம் அஸ்ஸலமீ, உஸ்மான் பின் கியாத், அலீ பின் ஸுவைத் பின் மன்ஜூஃப், கஹ்மஸ் பின் அல்ஹஸன் அத்தமீமீ, பஷீர் பின் அல்முஹாஜிர்

வேறு பெயர்கள்: இப்னு புரைதா, அப்துல்லாஹ் பின் புரைதா பின் அல்குஸைப்


ஆதாரம்: muslimscholars.info (11432) · Should verify


حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، قَالَ: قَالَتْ عَائِشَةُ:

«لَوْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ كَانَ أَكْثَرُ دُعَائِي فِيهَا أَسْأَلُ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29189.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-28616.



மேலும் பார்க்க : திர்மிதீ-3513 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.