தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-10015

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் உயிர், வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று (இலேசாக) வெளியேறும்.

இறைநம்பிக்கையாளர் செய்த சில தவறுகளை மன்னிப்பதற்காக மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு கடினமாக்கப்படும். இறைமறுப்பாளர் செய்த சில நன்மைகளுக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு இலேசாக்கப்படும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10015)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ صَدَقَةَ الْبَغْدَادِيُّ، ثنا حَمَّادُ بْنُ الْحُسَيْنِ بْنِ عَنْبَسَةَ الْوَرَّاقُ، ثنا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ، ثنا الْقَاسِمُ بْنُ مُطَيَّبٍ الْعِجْلِيُّ، حَدَّثَنِي الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ تَسِيلُ كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، وَإِنَّ الْمُؤْمِنَ لَيَعْمَلُ الْخَطِيئَةَ فَيُشَدَّدُ بِهَا عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيُكَفَّرَ بِهَا، وَإِنَّ الْكَافِرَ لَيَعْمَلُ الْحَسَنَةَ فَيُسَهَّلُ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيُجْزَى بِهَا»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10015.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-9876.




إسناد ضعيف فيه الحجاج بن نصير الفساطيطي وهو ضعيف الحديث ، والقاسم بن المطيب العجلي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர், காஸிம் பின் முதய்யப் போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-980 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.