பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை சரிக்கு சமமாக எனது சமுதாயத்திற்கும் ஏற்படும். எந்தளவுக்கென்றால், அவர்களில் சிலர் தன் தாயிடம் பகிரங்கமாக (தவறான எண்ணத்தில்) வந்ததைப் போன்று என் சமுதாயத்திலும் அவ்வாறு செய்பவர்கள் தோன்றுவர்.
பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு மார்க்கமுடையவர்களாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று மார்க்கமுடையவர்களாக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் எனது தோழர்களும் எதில் இருக்கிறோமோ அதில் இருப்பவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(திர்மிதி: 2641)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ الأَفْرِيقِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بني إسرائيل حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ، وَإِنَّ بني إسرائيل تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً»، قَالُوا: وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي»
«هَذَا حَدِيثٌ مُفَسَّرٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2641.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2584.
إسناد ضعيف فيه عبد الرحمن بن زياد الإفريقي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21738-அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் பின் அன்உம் அல்அஃப்ரீகீ என்பவர் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளார். - வேறு சில அறிஞர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் கூறியுள்ளனர்.
- இவர், நல்ல மனிதர் தான் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-17/102, தஹ்தீபுத் தஹ்தீப்-2/505, தக்ரீபுத் தஹ்தீப்-1/578)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
10 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2641 , அல்முஃஜமுல் கபீர்-62 , ஹாகிம்-444 ,
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3992 .
சமீப விமர்சனங்கள்