அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தினர் எழுபதுக்கு மேற்பட்ட பிரிவினராக பிரிவார்கள். தங்கள் சுயசிந்தனையால் அனுமதிக்கப்பட்டதை தடுக்கப்பட்டது என்றும், தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். இவர்கள் தான் எனது சமுதாயத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை ஈஸா பின் யூனுஸ் அவர்களிடமிருந்து நுஐம் பின் ஹம்மாத் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.
(bazzar-2755: 2755)حَدَّثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ السِّجِسْتَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«سَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً أَعْظَمُهَا فِتْنَةً عَلَى أُمَّتِي قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيهِمْ يُحَرِّمُونَ الْحَلَالَ، وَيُحِلُّونَ الْحَرَامَ»
وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ أَحَدًا حَدَّثَ بِهِ إِلَّا نُعَيْمُ بْنُ حَمَّادٍ وَلَمْ يُتَابَعْ عَلَيْهِ
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-2755.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2415.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நுஐம் பின் ஹம்மாத் அவர்கள் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறு செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இவர் வழியாக வரும் பலவீனமான செய்திகளை அடையாளப்படுத்தி உள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1006)
- இந்த செய்தியை இவர் மட்டும் தனித்து அறிவிப்பதால் கதீப் பக்தாதீ, இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
மிஸ்ஸீ போன்ற அறிஞர்கள் இதை நிராகரிக்கப்பட்ட செய்தி எனக் கூறியுள்ளனர். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இது அடிப்படையற்ற செய்தி என்று விமர்சித்துள்ளார்கள்.
(நூல்: ஸவாயித் தாரீகு பஃக்தாத்-2043)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3992 .
சமீப விமர்சனங்கள்