தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-18675

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், பனூ இஸ்ரவேலர்கள் எத்தனை கூட்டமாக பிரிந்தனர் என அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினரும் அவ்வாறே, அல்லது அதைவிட ஒன்று அதிகமாக (எழுபத்தி மூன்று கூட்டத்தினராக) பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகில் இருப்பர் என்று பதிலளித்தார்கள்.

 

(musannaf-abdur-razzaq-18675: 18675)

أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ , عَنْ قَتَادَةَ , قَالَ:

سَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ: عَلَى كَمْ تَفَرَّقَتْ بَنُو إِسْرَائِيلَ؟ فَقَالَ: عَلَى وَاحِدَةٍ , أَوِ اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً. قَالَ: «وَأُمَّتِي أَيْضًا سَتَفْتَرِقُ مِثْلَهُمْ , أَوْ يَزِيدُونَ وَاحِدَةً , كُلُّهَا فِي النَّارِ إِلَّا وَاحِدَةً»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-18675.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-18063.




  • அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 43 இல் இறந்துவிட்டார். கதாதா (ரலி) ஹிஜ்ரீ 61 இல் தான் பிறந்தார். எனவே இடையில் நபித்தோழர் விடுப்பட்டுள்ளதால் இது முர்ஸல் என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

12 . இந்தக் கருத்தில் கதாதா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-18675 .

மேலும் பார்க்க : இப்னு மாஜா-3992 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.