தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-170

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 மனித ரோமம் கழுவிய தண்ணீர் (பற்றிய சட்டம்).

மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ்(ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. இவ்வாறே நாய் வாய் வைத்த தண்ணீரையும் பள்ளிவாசலுக்குள் நாய் கடந்துசென்ற இடத்தையும் அசுத்தமானவையாக அவர்கள் கருதவில்லை.

தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால் அந்த தண்ணீரால் உளூ செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம் நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் (4:43 ஆவது) இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில் தண்ணீர் என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய் வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான் என்றாலும் உளூ செய்பவருடைய மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே அந்தத் தண்ணீரில் உளூ செய்பவர் தயம்மும் செய்து கொள்ளவும் வேண்டும். 

 ‘அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அல்லது அனஸின் குடும்பத்தாரிடமிருந்து நாங்கள் பெற்ற, நபி(ஸல்) அவர்களின் முடி எங்களிடம் உள்ளது என அபீதா என்பவரிடம் கூறினேன். அப்போது அவர், ‘நபி(ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகம் மற்றும் அதிலுள்ளவற்றையும் விட எனக்கு மிக விருப்பமானதாகும்’ என்று கூறினார்’ முஹம்மத் இப்னு ஸீரின் அறிவித்தார்.
Book : 4

(புகாரி: 170)

بَابُ المَاءِ الَّذِي يُغْسَلُ بِهِ شَعَرُ الإِنْسَانِ

وَكَانَ عَطَاءٌ: «لاَ يَرَى بِهِ بَأْسًا أَنْ يُتَّخَذَ مِنْهَا الخُيُوطُ وَالحِبَالُ. وَسُؤْرِ الكِلاَبِ وَمَمَرِّهَا فِي المَسْجِدِ» وَقَالَ الزُّهْرِيُّ: «إِذَا وَلَغَ فِي إِنَاءٍ لَيْسَ لَهُ وَضُوءٌ غَيْرُهُ يَتَوَضَّأُ بِهِ» وَقَالَ سُفْيَانُ: ” هَذَا الفِقْهُ بِعَيْنِهِ، يَقُولُ اللَّهُ تَعَالَى: {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا} [النساء: 43] وَهَذَا مَاءٌ، وَفِي النَّفْسِ مِنْهُ شَيْءٌ، يَتَوَضَّأُ بِهِ وَيَتَيَمَّمُ “

حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ

قُلْتُ لِعَبِيدَةَ «عِنْدَنَا مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَبْنَاهُ مِنْ قِبَلِ أَنَسٍ أَوْ مِنْ قِبَلِ أَهْلِ أَنَسٍ» فَقَالَ: لَأَنْ تَكُونَ عِنْدِي شَعَرَةٌ مِنْهُ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.