தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-170

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 33

மனித ரோமம் கழுவிய தண்ணீர் (பற்றிய சட்டம்).

மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. இவ்வாறே நாய் வாய் வைத்த தண்ணீரையும் பள்ளிவாசலுக்குள் நாய் கடந்துசென்ற இடத்தையும் அசுத்தமானவையாக அவர்கள் கருதவில்லை.


தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால் அந்த தண்ணீரால் உளூ செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம் நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் (அல்குர்ஆன்: 4:43) ஆவது இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில் தண்ணீர் என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய் வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான் என்றாலும் உளூ செய்பவருடைய மனதில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே அந்தத் தண்ணீரில் உளூ செய்பவர் தயம்மும் செய்து கொள்ளவும் வேண்டும். 


170. முஹம்மத் பின் ஸீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அல்லது அனஸின் குடும்பத்தாரிடமிருந்து நாங்கள் பெற்ற, நபி (ஸல்) அவர்களின் முடி எங்களிடம் உள்ளது என அபீதா என்பவரிடம் நான் கூறினேன். அப்போது அவர், “நபி (ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகம் மற்றும் அதிலுள்ளவற்றையும் விட எனக்கு மிக விருப்பமானதாகும்” என்று கூறினார்.

அத்தியாயம்: 4


بَابُ المَاءِ الَّذِي يُغْسَلُ بِهِ شَعَرُ الإِنْسَانِ

وَكَانَ عَطَاءٌ: «لاَ يَرَى بِهِ بَأْسًا أَنْ يُتَّخَذَ مِنْهَا الخُيُوطُ وَالحِبَالُ. وَسُؤْرِ الكِلاَبِ وَمَمَرِّهَا فِي المَسْجِدِ» وَقَالَ الزُّهْرِيُّ: «إِذَا وَلَغَ فِي إِنَاءٍ لَيْسَ لَهُ وَضُوءٌ غَيْرُهُ يَتَوَضَّأُ بِهِ» وَقَالَ سُفْيَانُ: ” هَذَا الفِقْهُ بِعَيْنِهِ، يَقُولُ اللَّهُ تَعَالَى: {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا} [النساء: 43] وَهَذَا مَاءٌ، وَفِي النَّفْسِ مِنْهُ شَيْءٌ، يَتَوَضَّأُ بِهِ وَيَتَيَمَّمُ “

حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ

قُلْتُ لِعَبِيدَةَ «عِنْدَنَا مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَبْنَاهُ مِنْ قِبَلِ أَنَسٍ أَوْ مِنْ قِبَلِ أَهْلِ أَنَسٍ» فَقَالَ: لَأَنْ تَكُونَ عِنْدِي شَعَرَةٌ مِنْهُ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا


Bukhari-Tamil-170.
Bukhari-TamilMisc-170.
Bukhari-Shamila-170.
Bukhari-Alamiah-165.
Bukhari-JawamiulKalim-167.

புகாரீ இமாம்

محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبه الجعفي البخاري

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

தரம்: மிகப் பலமானவர், ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் அல்முகீரா பின் பர்திஸ்பா

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வம்சம்: அல்ஜுஃஃபீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: புகாரா

பயணித்த ஊர்கள்: புகாரா, பஸரா, ஹிஜாஸ், எகிப்து, பஃக், ஸமர்கந்த்

பிறப்பு: ஹிஜ்ரி 194, புகாரா

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

கால கட்டம்: பிந்தைய காலத்தவர்


வாழ்க்கைக் குறிப்பு

புகாரீ இமாம் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு புகாராவில் பிறந்தார்கள். அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் மற்றும் ஹாஃபிழ் ஆவார். ஹதீஸ் கலையில் உலக இமாமாகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் ஹதீஸ்களைத் திரட்டுவதற்காக முஸ்லிம் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தார்கள். அவர்கள் தொகுத்த ஸஹீஹ் புகாரீ, குர்ஆனுக்குப் பிறகு மிகவும் நம்பகமான ஹதீஸ் நூலாகக் கருதப்படுகிறது. அவர்கள் ஹிஜ்ரி 256 ஆம் ஆண்டு ஸமர்கந்தில் மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உபைதுல்லாஹ் பின் மூஸா பின் அபில்முக்தார், முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ, ளஹ்ஹாக் பின் மக்லத் அபூ ஆஸிம் அன்னபீல், மக்கீ பின் இப்ராஹீம் பின் பஷாயர், அலீ பின் அல்மதனீ, யஹ்யா பின் மஈன், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, ஸயீத் பின் அபீ மர்யம், அஃப்பான் பின் முஸ்லிம், மாலிக் இமாம், குதைபா பின் ஸயீத் பின் ஜமீல், உஸ்மான் பின் முஹம்மத் (அபூ ஷைபா)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அல்ஹரவீ, முஹம்மத் பின் அஹ்மத் பின் தூலாப், மன்சூர் பின் முஹம்மத் பஸ்தூரீ

வேறு பெயர்கள்: முஹம்மத் பின் இஸ்மாயீல், இமாம் புகாரீ


ஆதாரம்: muslimscholars.info (30001) · Should verify

மாலிக் பின் இஸ்மாயீல்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இஸ்ராயீல் பின் யூனுஸ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஆஸிம் பின் ஸுலைமான்

عاصم بن سليمان الأحول

இறப்பு: ஹிஜ்ரி 141 அல்லது 142 அல்லது 143, பஸரா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஆஸிம் பின் ஸுலைமான்

தந்தை பெயர்: ஸுலைமான்

வம்சம்: பனூ தமீம் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான், அல்அஹ்வல்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா, கூஃபா, மதாயின்

இறப்பு: ஹிஜ்ரி 141 அல்லது 142 அல்லது 143, பஸரா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஆஸிம் பின் ஸுலைமான் அல்அஹ்வல் ரஹ் அவர்கள் பஸராவைச் சேர்ந்த தாபிஈ ஆவார். இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் கூஃபாவில் அளவைகள் மற்றும் எடைகளின் பொறுப்பாளராகவும், மதாயினின் நீதிபதியாகவும் பணியாற்றினார்.

ஹிஜ்ரி 141 அல்லது 142 அல்லது 143 ஆம் ஆண்டுகளில் பஸராவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் அல்மஸ்னீ, அபூ உஸ்மான் அன்நஹ்தீ, இக்ரிமா, இப்னு ஸீரீன், ஹஃப்ஸா பின்த் ஸீரீன், முஆதா பின்த் அப்துல்லாஹ், அபூ குலாபா, அப்துல்லாஹ் பின் ஷகீக் அல்அகீலீ, அபூ அல்முதவக்கில் அன்னாஜீ, மூஸா பின் அனஸ் பின் மாலிக், அல்ஹஸன் அல்மஸ்ரீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): கதாதா, ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஹம்மாத் பின் ஸைத், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், இஸ்மாயீல் பின் இப்ராஹீம்-இப்னு அலிய்யா, அப்துல்லாஹ் பின் முபாரக், யஹ்யா பின் ஸகரிய்யா பின் அபூஸாயிதா, யஸீத் பின் ஹாரூன், மஃமர் பின் ராஷித், ஹஃப்ஸ் பின் கியாஸ், ஸுஹைர் பின் முஆவியா

வேறு பெயர்கள்: ஆஸிம் அல்அஹ்வல், ஆஸிம் பின் ஸுலைமான்


ஆதாரம்: muslimscholars.info (11080) · Should verify

இப்னு ஸீரீன் (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபீதா பின் அம்ர் அஸ்ஸல்மானீ, அல்முராதீ (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

2 comments on Bukhari-170

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்த ஹதீஸ் தரத்துடன் தமிழில் வேண்டும்

    Narrated Abu Umamah:
    that the Messenger of Allah (ﷺ) said: “No people go astray after having been guided, but they resort to arguing.” Then the Messenger of Allah (ﷺ) recited this Ayah: ‘…They quoted not the above example except for argument. Nay! But they are quarrelsome people… (43:58)’

    Thirmidhi 3253

    1. வ அலைக்கும் ஸலாம்.

      இதை சில அறிஞர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர். அபூஃகாலிப் அவர்களைப் பற்றி சில விமர்சனம் இருப்பதால் வேறுசில அறிஞர்கள் பலவீனமானது என்றும் கூறியுள்ளனர். இது குறைந்தபட்சம் ஹஸன் லிஃகைரிஹீ என்ற தரத்தில் உள்ள செய்தி என்றே நமக்கு தெரிகிறது.

      பார்க்க: திர்மிதீ-3253.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.