அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(திர்மிதி: 2889)حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ هِشَامٍ أَبِي المِقْدَامِ، عَنْ الحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةِ الجُمُعَةِ غُفِرَ لَهُ»
«هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ وَهِشَامٌ أَبُو المِقْدَامِ يُضَعَّفُ، وَلَمْ يَسْمَعِ الحَسَنُ مِنْ أَبِي هُرَيْرَةَ، هَكَذَا قَالَ أَيُّوبُ وَيُونُسُ بْنُ عُبَيْدٍ وَعَلِيُّ بْنُ زَيْدٍ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2889.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2833.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹிஷாம் பின் ஸியாத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- துகான் அத்தியாயத்தின் சிறப்பு.
ஹஸன் பஸரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க : திர்மிதீ-2889 , முஸ்னத் அபீ யஃலா-6224 , 6232 ,
2 . ஃபளாலா பின் ஜுபைர் —> அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-8026 ,
3. அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-2888 ,
4 . மற்றவர்கள் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : தாரிமீ-3463 , 3464 ,
- யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு.
1 . ஹஸன் பஸரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-2589 , தாரிமீ-3460 , முஸ்னத் அபீ யஃலா-6224 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3509 , அல்முஃஜமுஸ் ஸகீர்-417 ,
2 . ஹஸன் பஸரீ —> ஜுன்துப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : இப்னு ஹிப்பான்-2574 ,
3 . அபூ முஃதமிர் (ஸுலைமான் பின் தர்க்கான்) —> ஹஸன் பஸரீ வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : தாரிமீ-3458 ,
மேலும் பார்க்க : அஹ்மத்-20300 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2887 ,
இமாம் திர்மிதீ (ரஹ்) கூறினார்கள்
இது கரீப்(தனித்தது)..ஹிஸாம் அபுல் மிக்தம் இப்னு ஸியாத் அவரின் அறிவிப்பை தவிர்த்து வேறு அறிவிப்பு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்று கூறுகிறார்கள்..ஹிஸாம் அபு அல் மிக்தம் என்பவர் பலவீனமானவர் ,ஹஸன் அவர்கள் அபுஹூரைரா அவர்களிடம் இருந்து எதையும் கேட்டறியவில்லை என்று அய்யூப்,யூனுஸ் இப்னு உபைத்,அலி இப்னு ஸயீத் கூறுகிறார்கள்
இதில் இரண்டு பலவீனம் இருக்கிறது
1)ஹிஸாம் அபுல் மிக்தம் இவர் நம்பிக்கையான அறிவிப்பாளர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிவிப்பவர் அதனால் இவரது செய்தியை ஆதாரமாகக் ஏற்க கூடாது என்று இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) கூறுகிறார்கள்
நூல்-தஹ்தீப் அல் தஹ்தீப்-11/39
2)இந்த செய்தியில் ஹஸன் அவர்களுக்கும் அபுஹூரைரா அவர்களுக்கும் இடையே அறிவிப்பாளர் தொடர் முறிந்துள்ளது அதனால் இது பலவீனமான செய்தியாகும்
இமாம் இப்னு ஜவ்ஜி இந்த செய்தி பலவீனமானது என்று கூறினார்கள்
நூல்-மவ்ளூத்-(1/247)
இந்த செய்தி பலவீனமான செய்தி என்று இப்னு அல் அரபி(ரஹ்) கூறுகிறார்கள்
நூல்-அரிதா அல் ஹவ்வாதி-(6/35)
இது பலவீனமான செய்தி என்று இமாம் அல்பானி(ரஹ்) ளயீஃப் அல் திர்மீதியில் கூறுகிறார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா.