தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-7532

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

அறிவிப்பாளர் முஹம்மது பின் இப்ராஹீம் அவர்களின் அறிவிப்பில், குல்ஹுவல்லாஹு அஹத் என்ற (112) அத்தியாயத்தையும் ஆயத்துல் குர்ஸீயுடன் ஓதவேண்டும் என இடம்பெற்றுள்ளது.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7532)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ كَيْسَانَ الْمِصِّيصِيُّ، ثنا الْحُسَيْنُ بْنُ بِشْرٍ الطَّرَسُوسِيُّ، ح وحَدَّثَنَا عَمْرُو بْنُ إِسْحَاقَ بْنِ الْعَلَاءِ بْنِ زِبْرِيقٍ الْحِمْصِيُّ، ثنا عَمِّي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ ح، وحَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثنا هَارُونُ بْنُ دَاوُدَ النَّجَّارُ الطَّرَسُوسِيُّ، قَالُوا: ثنا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ الْأَلْهَانِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ:

«مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ، إِلَّا الْمَوْتُ»

زَادَ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ فِي حَدِيثِهِ: «وَقُلُ هُوَ اللهُ أَحَدٌ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7532.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7406.




  • இதன் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் இரண்டில் வரும் ராவீ-37405-முஹம்மது பின் ஹஸன் என்பவரும், ராவீ-46834-ஹாரூன் பின் தாவூத் என்பவரும் யாரென அறியப்படாதவர்கள்.
  • மூன்றாவது அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35390-முஹம்மது பின் இப்ராஹீம் பின் அல்அலாஉ பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சிக்கப்பட்டவர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/492)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: குப்ரா நஸாயீ-9848 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.