அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(நஸாயி: 9848)أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ بِشْرٍ، بِطَرَسُوسَ، كَتَبْنَا عَنْهُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-9848.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-9532.
إسناد حسن
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38711-முஹம்மது பின் ஹிம்யர் அவர்களைப் பற்றி
- இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
போன்றோர் பலமானவர் என்றும், - அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் சுமாரானவர் என்றும், - அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவரின் ஹதீஸ் எழுதப்படும், ஆனால் (தனித்து அறிவித்தால்) ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும், - யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3 / 549 )
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக்-சுமாரானவர் என்ற வகையினரில் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/181).
எனவே இந்த செய்தியை சிலர் பலவீனமானது என்றும், சிலர் ஹஸன் தரத்தில் உள்ளது என்றும் கூறுகின்றனர்.
- இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் அனைத்து அறிஞர்களின் விமர்சனங்களையும் படித்துவிட்டு அவை ஒன்றுக்கொன்று எதிராக அமைந்திருந்தாலும் அவற்றிலிருந்து தனது முடிவை சுருக்கமாக ஒரு வரியில் தெரிவிப்பார். இந்த அறிஞர், அறிவிப்பாளர் ஹிம்யரைப் பற்றி ளயீஃப் (பலவீனமானவர்) என்று குறிப்பிடாமல் நம்பிக்கைக்குரியவர். இலேசான மனனத் தன்மை கொண்டவர் என்று சான்றளித்துள்ளார். - அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் அதிகமான அறிஞர்கள் நல்லவிதமாக கூறிய கருத்துக்களே ஏற்புடையதாக இருக்கின்றது. எனவே இந்த செய்தி பலமானதாகும்.
1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா நஸாயீ-9848 , அல்முஃஜமுல் கபீர்-7532 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8068 ,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: ஷுஅபுல் ஈமான்-2167 ,
சமீப விமர்சனங்கள்