தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-2167

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஸல்ஸால் பின் தலஹ்மஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஸூரத்துல் பகராவை ஓதக்கூடியவருக்கு (மறுமையில்) சொர்க்கத்தின் கிரீடம் அணிவிக்கப்படும்.

உங்கள் வீடுகளில் (திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான) ஸூரத்துல் பகராவை ஓதுங்கள்; அவைகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.

ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் (2: 255 வது வசனமான) ஆயத்துல் குர்ஸியை ஓதிவரக்கூடியவருக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் சொர்க்கம் செல்ல தடையாக இருக்காது. அவர் மரணித்துவிட்டால் சொர்க்கம் செல்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(shuabul-iman-2167: 2167)

أَخْبَرَنَا عَلِيٌّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ حدثنا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، حدثنا أَبُو عُمَارَةَ الْمُسْتَمْلِي، حدثنا مُحَمَّدُ بْنُ الضَّوْءِ يَعْنِي ابْنَ الصَّلْصَالِ بْنِ الدَّلْهَمَسِ، حدثنا أَبِي، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

مَنْ قَرَأَ سُورَةَ الْبَقَرَةِ تُوِّجَ بِتَاجِ الْجَنَّةِ

وَبِإِسْنَادِهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ فِي بُيُوتِكُمْ وَلَا تَجْعَلُوهَا قُبُورًا

وَبِإِسْنَادِهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ لَمْ يَكُنْ بَيْنَهُ وَبَيْنَ أَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا أَنْ يَمُوتَ، فَإِذَا مَاتَ دَخَلَ الْجَنَّةَ

أَبُو عُمَارَةَ الْمُسْتَمْلِي أَظُنُّهُ أَحْمَدُ بْنُ زَيْدٍ الْمَهْدِيُّ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2167.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2178.




إسناد فيه محمد بن الضوء الكوفي وهو كذاب

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-37755-முஹம்மது பின் ளவ்உ பின் ஸல்ஸால் என்பவர் பற்றி இமாம் ஜவ்ஸஜானீ அவர்கள் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவரின் செய்திகளை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்றும், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவரின் செய்திகள் பொய்யானவை என்றும் கூறியுள்ளனர்…

(நூல்: லிஸானுல் மீஸான்-7/209, தாரீகுல் இஸ்லாம்-5/919…)

எனவே இது மவ்ளூவான அறிவிப்பாளர்தொடராகும்.

இந்தச் செய்தியின் மூன்றாவது பகுதியின் கருத்தில் சரியான ஹதீஸ் உள்ளது.

1 . இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: தாரிமீ-3421 .

2 . இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியின் கருத்துடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1430 .

2 . இந்தச் செய்தியின் மூன்றாவது பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா நஸாயீ-9848 .

 

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.