தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-3481

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், (ரியா எனும்) முகஸ்துதியை சிறிய இணைவைத்தல் என்று கருதி வந்தோம்.

அறிவிப்பவர்: யஃலா பின் ஷத்தாத் (ரஹ்)

(bazzar-3481: 3481)

قَرَأْتُ عَلَى عَلِيٍّ، نا ابْنُ أَبِي مَرْيَمَ، نا يَحْيَى بْنُ أَيُّوبَ، نا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادٍ، أَنَّهُ حَدَّثَهُ، عَنْ أَبِيهِ قَالَ:

كُنَّا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعُدُّ الشِّرْكَ الْأَصْغَرَ الرِّيَاءَ

وَهَذَا الْحَدِيثُ إِنَّمَا ذَكَرْنَاهُ وَإِنْ لَمْ يُذْكَرْ فِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلَامًا لِأَنَّهُ قَالَ: عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ نَحْفَظْ هَذَا الْكَلَامَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَاهُ مِنْ أَجْلِ ذَلِكَ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-3481.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2965.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48056-யஹ்யா பின் அய்யூப் என்பவர் பற்றி சிலர் இவர் பலமானவர் என்றும்; சிலர் இவர் சுமாரானவர், அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும்; சிலர் இவர் முன்கருல் ஹதீஸ்-ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.

1 . இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
இப்ராஹீம் அல்ஹர்பீ ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.

2 . இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் சிறிது சரியில்லாதவர் என்பதால் இவரிடமிருந்து ஏற்பட்ட சில தவறுகளின் அடிப்படையில் இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
போன்றோர் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளனர். (இப்னு மயீனும் இவ்வாறு கூறியதாக வேறு அறிவிப்பில் உள்ளது)

3 . அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூபக்ர் இஸ்மாயீலீ ஆகியோர் (இவர் தனித்து அறிவிக்கும் போது) இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.

4 . நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அபூபிஷ்ர் ஆகியோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்.

5 . இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள் இவர் முன்கருல் ஹதீஸ்-ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர் என்றும்; இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

6 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், இவர் தனது மனனத்திலிருந்து அறிவிக்கும் போது தவறிழைப்பார். நூலிலிருந்து அறிவித்தால் அதில் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார்.

7 . இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் பலமானவர்கள் வழியாக அறிவித்து இவரிடமிருந்து பலமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் எந்த முன்கரான ஹதீஸ்களையும் நான் காணவில்லை; இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.

8 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரின் சில சரியான ஹதீஸ்களை சில ஹதீஸ்கலை அறிஞர்கள் அறிவார்கள். ஆய்வு செய்து அதையே அவர்கள் தங்கள் நூலில் பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

(இவர் இடம்பெறும் சில ஹதீஸ்களை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோர் அறிவித்துள்ளனர்.)

இவரைப் பற்றிய ஆய்வில் சில அறிஞர்கள் இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று குறிப்பிட்டுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இவர் ஸதூக்-நம்பகமானவர் (நடுத்தரமானவர்); சில இடங்களில் தவறிழைத்தவர் என்று கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இவர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/473, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-9/54, தாரீீகுல் இஸ்லாம்-4/539, ஸியரு அஃலாமின் நுபலா-8/5, தஹ்தீபுல் கமால்-31/233, அல்காஷிஃப்-4/473, தஹ்தீபுத் தஹ்தீப்-4/342, தக்ரீபுத் தஹ்தீப்-1/1049)

  • மேலும் இதில் வரும் ராவீ-49407-யஃலா பின் ஷத்தாத் அவர்கள் பற்றி இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/450, தக்ரீபுத் தஹ்தீப்-1/1090)

மேற்கண்ட இரு அறிவிப்பாளர்களின் தரத்தின்படி இந்த செய்தி ஹஸன் தரமாகும்.

1 . இந்தக் கருத்தில் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3481 , அல்முஃஜமுல் கபீர்-7160 , அல்முஃஜமுல் அவ்ஸத்-196 , ஹாகிம்-7937 ,

2 . மஹ்மூத் பின் லபீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23636 .

3 . ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-4301 .

4 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3989 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.