மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:
(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓதியதை நான் பார்த்துள்ளேன்” என்று கூறினார்கள்.
இப்னு ஜுரைஜ் கூறினார்:
நான் இப்னு அபீ முலைகா (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டு பெரிய அத்தியாயங்கள் எவை? எனக் கேட்டேன். அதற்கவர் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும், யூனுஸ் (10 வது) அத்தியாயமும் தான் என்று பதிலளித்தார்…
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4812)حَدَّثَنَا أَبُو مُسْلِمٍ الْكَشِّيُّ، ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، يَقُولُ أَخْبَرَنِي: عُرْوَةُ، عَنْ مَرْوَانَ قَالَ:
قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لِي أَرَاكَ تَقْرَأُ فِي الصَّلَاةِ بِقِصَارِ الْمُفَصَّلِ؟ فَلَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِالطَّوِيلتَيْنِ»
قُلْتُ: وَمَا الطَّوِيلتَيْنِ؟ قَالَ: «الْأَعْرَافُ، وَيُونُسُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4812.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-4674.
- இந்த கருத்தில் வரும் செய்திகளில், அவ்விரண்டு பெரிய அத்தியாயங்கள் அல் அன்ஆம் (6 வது) அத்தியாயமும், அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும் என்று வரும் செய்திகளே சரியானவை.
- அல்மாயிதா, யூனுஸ் என்று வரும் செய்திகள் தவறுதலானவை. (பார்க்க: அபூதாவூத்-812 )
மேலும் பார்க்க: புகாரி-764 .
சமீப விமர்சனங்கள்