தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-4811

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய இருஅத்தியாயங்களில் மிகப்பெரியதை ஓதுவார்கள்” என்று கூறினார்கள்.

இப்னு அபீ முலைகா (ரஹ்) கூறினார்:

நான் (உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்) அந்த இரண்டில் மிகப்பெரிய அத்தியாயம் எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயம் என்று பதிலளித்தார்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4811)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الدَّبَرِيُّ، ثنا عَبْدُ الرَّزَّاقِ، أَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي مُلَيْكَةَ، يَقُولُ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، أَخْبَرَهُ قَالَ:

قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لَكَ تَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ، وَقَدْ «كَانَ نَبِيُّ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ طُولَ الطَّوِيلتَيْنِ»

قُلْتُ لِعُرْوَةَ: وَمَا طُولُ الطَّوِيلَتَيْنِ؟ قَالَ: «الْأَعْرَافُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4811.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-4673.




மேலும் பார்க்க: புகாரி-764 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.