தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-7457

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் (பெருநாள் தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

(bazzar-7457: 7457)

حَدَّثنا سهيل بن إبراهيم الجارودي، حَدَّثنا عَبد الله بن سلام صاحب الطيالسة، حَدَّثنا عُبَيد الله بن أبي بَكْرٍ، عَن أَنَس؛

أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كان لا يغدو يوم الفطر حتى يأكل تمرات قبل أن يغدو.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7457.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஹைல் பின் இப்ராஹீம் பற்றி, இவர் தவறிழைப்பவர் என இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் விமர்சித்துள்ளார்கள். (நூல்: லிஸானுல் மீஸான் 4/209). மேலும் இதில் வரும் அப்துல்லாஹ் பின் ஸலாம் அறியப்படாதவர் ஆவார்.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: புகாரி-953 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.