தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3598

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும்.

1 . நோன்பாளி நோன்புத் துறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை.

2 . நீதமான அரசனின் பிரார்த்தனை.

3 . அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. அல்லாஹ், அதை மேகத்திற்கு மேலாக உயர்த்தி அதற்காக வானத்தின் கதவுகளை திறக்கிறான். மேலும், “எனது கண்ணியத்தின் மீது ஆணையாக! சிறிது நேரத்திற்குள் உனக்கு உதவி செய்கிறேன்” என்று கூறுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 3598)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ سَعْدَانَ القُبِّيِّ، عَنْ أَبِي مُجَاهِدٍ، عَنْ أَبِي مُدِلَّةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَالإِمَامُ العَادِلُ، وَدَعْوَةُ المَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الغَمَامِ وَيَفْتَحُ لَهَا أَبْوَابَ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ

«هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَسَعْدَانُ القُبِّيُّ هُوَ: سَعْدَانُ بْنُ بِشْرٍ، وَقَدْ رَوَى عَنْهُ عِيسَى بْنُ يُونُسَ، وَأَبُو عَاصِمٍ، وَغَيْرُ وَاحِدٍ مِنْ كِبَارِ أَهْلِ الحَدِيثِ، وَأَبُو مُجَاهِدٍ هُوَ: سَعْدٌ الطَّائِيُّ، وَأَبُو مُدِلَّةَ هُوَ: مَوْلَى أُمِّ المُؤْمِنِينَ عَائِشَةَ، وَإِنَّمَا نَعْرِفُهُ بِهَذَا الحَدِيثِ، وَيُرْوَى عَنْهُ هَذَا الْحَدِيثُ أَطْوَلَ مِنْ هَذَا وَأَتَمَّ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3598.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3552.





1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூமுதில்லா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-( 2706 ), 2707 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-8902 , 21923 , 32558 , அஹ்மத்-80438044 தாரிமீ- , இப்னு மாஜா-1752 , திர்மிதீ-3598 , இப்னு குஸைமா-1901 , இப்னு ஹிப்பான்-874 , 3428 , 7387 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7111 , …


  • ஸஅத்-அபூமுஜாஹித் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7111 ,

  • அபூகுரைப்…—> ஸியாத் அத்தாஈ- (அல்லது ஸஅத் அத்தாஈ-அபூமுஜாஹித்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-2526 ,

  • ஷரீக் —> அதாஉ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8751 ,

  • இப்ராஹீம் பின் குஸைம்….—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8148 ,


இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1536 .


இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல்  பிறகு சேர்க்கப்படும்.

2 comments on Tirmidhi-3598

  1. இந்தக் கருத்தில் அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்தி என குறிப்பிட்டு Tayalisi-2706,2707 மேற்கோள் காட்டி உள்ளீர்கள் எனினும் இந்த ஹதீஸுக்கும் திர்மிதியில் உள்ள ஹதீஸுக்கும் அறவே தொடர்பு இல்லை.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      சில ஹதீஸ் பல வகை தகவல் கலந்து அறிவிக்கப்பட்டிருக்கும். அதையே சிலர் சுருக்கமாக பல ஹதீஸ்களாக அறிவித்திருப்பார்கள். ஒரே அறிவிப்பாளர்தொடரில் பல செய்திகள் தனித்தனியாக வரும் போது அந்த தகவலை அறிவித்தவர்கள் சரியாக அறிவித்துள்ளார்களா என்பதை தெரிந்துக் கொள்வதற்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் தக்ரீஜில் இவ்வாறு கூறப்பட்டிருக்கும். பிறகு இந்தப் பக்கத்திலேயே தனித்தனியாக நாம் பிரித்து பதிவு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
      அஹ்மத்-8043 இல் இவை ஒரே செய்திகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

      ஏற்கப்படும் பிரார்த்தனை குறித்த ஹதீஸ்களை ஆரம்பத்தில் சிறிது சிறிதாக பதிவு செய்ததால் அவை நமது தளத்தில் சிதறிக் கிடக்கிறது. இன்ஷா அல்லாஹ் இவைகளை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் தொகுக்கும் பணி நடைபெறும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.