நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும்.
1 . நீதமான அரசனின் பிரார்த்தனை.
2 . நோன்பாளி (நோன்புத் துறக்கும் வரை உள்ள நேரங்களில்) செய்யும் பிரார்த்தனை.
3 . அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.
அநீதிக்கு உள்ளானவரின் பிரார்த்தனை மேகங்களுக்கு மேலே உயர்த்தப்படுகிறது. அதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. மேலும், அல்லாஹ் கூறுகிறான்: என் மாண்பின் மீதாணையாக! உனக்கு நிச்சயமாக உதவி செய்வேன்; அது சிறிது காலம் தாமதித்தாலும் கூட!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 1752)حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سَعْدَانَ الْجُهَنِيِّ، عَنْ سَعْدٍ أَبِي مُجَاهِدٍ الطَّائِيِّ وَكَانَ ثِقَةً، عَنْ أَبِي مُدِلَّةَ وَكَانَ ثِقَةً، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ، الْإِمَامُ الْعَادِلُ، وَالصَّائِمُ، حَتَّى يُفْطِرَ، وَدَعْوَةُ الْمَظْلُومِ، يَرْفَعُهَا اللَّهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ، وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ، وَيَقُولُ: بِعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1752.
Ibn-Majah-Alamiah-1742.
Ibn-Majah-JawamiulKalim-1742.
- ஸஃத் அத்தாஈ அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் இதை 3 செய்திகளாக அறிவித்துள்ளனர். சிலர் சுருக்கமாக அறிவித்துள்ளனர். மேற்கண்ட செய்தி சுருக்கமானதாகும்.
விரிவான செய்தி பார்க்க: அஹ்மத்-8043.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . அலீ பின் முஹம்மத்
3 . வகீஃ பின் ஜர்ராஹ்
4 . ஸஃதான் அல்ஜுஹனீ-ஸயீத் பின் பிஷ்ர்
5 . ஸஃத் அத்தாஈ-அபூமுஜாஹித்-உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்
6 . அபூமுதில்லா (ஆயிஷா-ரலி-அவர்களின் அடிமை)
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இந்தச் செய்தியை ஸஃத் அத்தாஈ அவர்களிடமிருந்து ஸஃதான், ஸுஹைர் பின் முஆவியா, அம்ர் பின் கைஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸஃதான் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: அஹ்மத்-9743, இப்னு மாஜா-1752, திர்மிதீ-3598, மஸாவில் அக்லாக்-587,
مساوئ الأخلاق للخرائطي (ص: 276)
587 – حَدَّثَنَا حَمَّادُ بْنُ الْحَسَنِ بْنِ عَنْبَسَةَ الْوَرَّاقُ، ثنا أَبُو عَاصِمٍ النَّبِيلُ، ثنا سَعْدَانُ بْنُ بِشْرٍ، ثنا أَبُو مُجَاهِدٍ، قَالَ: ثنا أَبُو مُدِلَّةَ مَوْلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَ: ثنا أَبُو هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمُ: الصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَالْإِمَامُ الْعَادِلُ، وَدَعْوَةُ الْمَظْلُومِ، يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ، وَيَفْتَحُ لَهَا أَبْوَابَ السَّمَوَاتِ، وَيَقُولُ لَهَا الرَّبُّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ “
- ஸுஹைர் பின் முஆவியா அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, இப்னு ஹிப்பான்-874, 3428, 7387, ஃபளீலதுல் ஆதிலீன்-, குப்ரா பைஹகீ-,
- அம்ர் பின் கைஸ் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: முக்தஸருல் அஹ்காம்-, இப்னு குஸைமா-1901,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-8043,
சமீப விமர்சனங்கள்