தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8043

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்,
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களிடம் இருக்கும்போது எங்கள் இதயங்கள் மிருதுவாகி, உலகத்தை வெறுத்து, மறுமையின் மக்களைப் போலாகிவிடுகிறோம். ஆனால், உங்களிடமிருந்து வெளியேறி எங்கள் குடும்பத்தாருடன் கலந்து, எங்கள் குழந்தைகளை நெருங்கும்போது, எங்களை நாங்களே மாறுபட்டவர்களாக உணர்கிறோம்” என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“நீங்கள் என்னிடமிருந்து வெளியேறிய பின்பும் அந்த நிலையிலேயே இருந்தால், உங்கள் வீடுகளில் வானவர்கள் வந்து உங்களைச் சந்திப்பார்கள். மேலும், நீங்கள் பாவம் செய்யாவிட்டால், அல்லாஹ் புதிய மனிதர்களைப் படைத்து, அவர்கள் பாவம் செய்து, பின்னர் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவான்” என்று கூறினார்கள்.


நான் அல்லாஹ்வின் தூதரிடம், “அல்லாஹ்வின் தூதரே! படைப்புகள் எதிலிருந்து படைக்கப்பட்டன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீரிலிருந்து” என்று பதிலளித்தார்கள். நான், “சொர்க்கத்தின் கட்டமைப்பு என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு செங்கல் வெள்ளியால் ஆனது, மற்றொரு செங்கல் தங்கத்தால் ஆனது. அவற்றின் பூச்சு நறுமணம் வீசும் கஸ்தூரி. அவற்றின் கூழாங்கற்கள் முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள். அவற்றின் மண் குங்குமப்பூ. அதில் நுழைந்தவர் பாக்கியம் பெறுவார்; துர்பாக்கியம் அடைய மாட்டார். அவர் நிரந்தரமாக இருப்பார்; இறக்க மாட்டார். அவர்களின் ஆடைகள் பழுதடையாது; அவர்களின் இளமை அழிந்து போகாது” என்று கூறினார்கள்.


மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும்.

1 . நீதமான அரசனின் பிரார்த்தனை.

2 . நோன்பாளி (நோன்புத் துறக்கும் வரை உள்ள நேரங்களில்) செய்யும் பிரார்த்தனை.

3 . அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.

அநீதிக்கு உள்ளானவரின் பிரார்த்தனை மேகங்களுக்கு மேலே உயர்த்தப்படுகிறது. அதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. மேலும், மகத்துவமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: என் மாண்பின் மீதாணையாக! உனக்கு நிச்சயமாக உதவி செய்வேன்; அது சிறிது காலம் தாமதித்தாலும் கூட!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 8043)

حَدَّثَنَا أَبُو كَامِلٍ، وَأَبُو النَّضْرِ، قَالَا: حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سَعْدٌ الطَّائِيُّ – قَالَ أَبُو النَّضْرِ: سَعْدٌ أَبُو مُجَاهِدٍ -، حَدَّثَنَا أَبُو الْمُدِلَّةِ، مَوْلَى أُمِّ الْمُؤْمِنِينَ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قُلْنَا:

يَا رَسُولَ اللَّهِ، إِنَّا إِذَا رَأَيْنَاكَ رَقَّتْ قُلُوبُنَا وَكُنَّا مِنْ أَهْلِ الْآخِرَةِ، وَإِذَا فَارَقْنَاكَ أَعْجَبَتْنَا الدُّنْيَا، وَشَمَمْنَا النِّسَاءَ وَالْأَوْلَادَ قَالَ: ” لَوْ تَكُونُونَ – أَوْ قَالَ: لَوْ أَنَّكُمْ تَكُونُونَ – عَلَى كُلِّ حَالٍ عَلَى الْحَالِ الَّتِي أَنْتُمْ عَلَيْهَا عِنْدِي، لَصَافَحَتْكُمُ الْمَلَائِكَةُ بِأَكُفِّهِمْ، وَلَزَارَتْكُمْ فِي بُيُوتِكُمْ، وَلَوْ لَمْ تُذْنِبُوا، لَجَاءَ اللَّهُ بِقَوْمٍ يُذْنِبُونَ كَيْ يَغْفِرَ لَهُمْ

قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، حَدِّثْنَا عَنِ الْجَنَّةِ، مَا بِنَاؤُهَا؟ قَالَ: «لَبِنَةُ ذَهَبٍ وَلَبِنَةُ فِضَّةٍ، وَمِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ، وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَالْيَاقُوتُ، وَتُرَابُهَا الزَّعْفَرَانُ، مَنْ يَدْخُلُهَا يَنْعَمُ وَلَا يَبْأَسُ، وَيَخْلُدُ وَلَا يَمُوتُ، لَا تَبْلَى ثِيَابُهُ وَلَا يَفْنَى شَبَابُهُ»

ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الْإِمَامُ الْعَادِلُ، وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَدَعْوَةُ الْمَظْلُومِ تُحْمَلُ عَلَى الْغَمَامِ، وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاوَاتِ، وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكَ وَلَوْ بَعْدَ حِينٍ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8043.
Musnad-Ahmad-Alamiah-7700.
Musnad-Ahmad-JawamiulKalim-7844.




  • இந்த அறிவிப்பாளர்தொடரில் 3 செய்திகள் உள்ளன. சிலர் இந்தச் செய்தியின் சில பகுதிகளை மட்டும் அறிவித்துள்ளனர். சிலர் முழுமையாக அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . அபூகாமில்-முளஃப்பர் பின் முத்ரிக், 3 . அபுன்நள்ர்-ஹாஷிம் பின் காஸிம்

4 . ஸுஹைர் பின் முஆவியா-அபூகைஸமா

5 . ஸஃத் அத்தாஈ-அபூமுஜாஹித்

6 . அபுல்முதில்லா (ஆயிஷா-ரலி-அவர்களின் அடிமை)

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16877-ஸஃத் அத்தாஈ-அபூமுஜாஹித் என்பவரை வகீஃ அவர்கள் பலமானவர் என்றும்; அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம், இப்னு ஹஜர்  ஆகியோர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-10/317, தஹ்தீபுத் தஹ்தீப்-1/699, தக்ரீபுத் தஹ்தீப்-1/372)


  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27394-அபுல்முதில்லா-அபூமுதில்லா-(உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் அல்மதனீ-அப்துல்லாஹ்) என்பவரின் அஸல் பெயர் அறியப்படவில்லை; இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களின் அடிமை என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    கூறியுள்ளார். (இவர் அதிகமாக அபூமுதில்லா என்று கூறப்படுகிறார்)
  • அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் விசயத்தில் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார்.
  • இப்னு மாஜா அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவரை பலமானவர் என்றும் இவரின் பெயர் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் என்றும் கூறியுள்ளார்.
  • உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள், இவர் முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.
  • தஹ்ரீர் ஆசிரியர்கள் இவரை இப்னு மாஜா அவர்கள் பலமானவர் என்றும், திர்மிதீ அவர்கள் இவரின் செய்திகளை ஹஸன் தரத்தில் கூறியுள்ளார் என்றும் குறிப்பிட்டுவிட்டு இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/444, அஸ்ஸிகாத்-5/72, தஹ்தீபுல் கமால்-34/269, அல்காஷிஃப்-5/107, தஹ்தீபுத் தஹ்தீப்-4/584, தக்ரீபுத் தஹ்தீப்-1/1202, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-8349)

உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்; இவரை சிலர் அறியப்படாதவர் என்று கூறியிருந்தாலும் மற்றவர்கள் அறிந்துள்ளனர் என்பதால் இவரைப் பற்றிய விமர்சனம் ஏற்புடையது அல்ல.

எனவே இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரத்தில் அமைந்ததாகும்.

அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், அபூமுதில்லா அறியப்படாதவர் என்பதின்படியே இந்தச் செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-1358)


1 . இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் வந்துள்ள செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5304.


2 . இந்தச் செய்தியின் இரண்டாம் பகுதியின் கருத்தில் வந்துள்ள செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-9744.


3 . இந்தச் செய்தியின் மூன்றாம் பகுதியின் கருத்தில் வந்துள்ள செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1752.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூமுதில்லா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-( 2706 ), 2707, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-8902, 21923, 32558, அஹ்மத்-8043, 8044 தாரிமீ-, இப்னு மாஜா-1752, திர்மிதீ-3598, இப்னு குஸைமா-1901, இப்னு ஹிப்பான்-874, 3428, 7387, அல்முஃஜமுல் அவ்ஸத்-7111, …


  • ஸஅத்-அபூமுஜாஹித் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7111,


  • அபூகுரைப்…—> ஸியாத் அத்தாஈ- (அல்லது ஸஅத் அத்தாஈ-அபூமுஜாஹித்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-2526,


  • ஷரீக் —> அதாஉ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8751,


  • இப்ராஹீம் பின் குஸைம்….—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8148,


  • யஹ்யா பின் அபூகஸீர் —> அபூ ஜஃபர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2639, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29830, அஹ்மத்-7510, 8043, 8044, 8581, 9606, 10196, 10708, 10771, அல்அதபுல் முஃப்ரத்-32, 481, இப்னு மாஜா-3862, அபூதாவூத்-1536, திர்மிதீ-1905, 3448, இப்னு ஹிப்பான்-2699,

  • யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-24,


2 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு குஸைமா-2478.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2526, 3598, அபூதாவூத்-1536,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.