தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2526

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

சொர்க்கமும், சொர்க்கத்தின் இன்பங்களும்.

…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும்.

1 . நீதமான அரசனின் பிரார்த்தனை.

2 . நோன்பாளி நோன்புத் துறக்கும் போது செய்யும் பிரார்த்தனை.

3 . அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 2526)

بَابُ مَا جَاءَ فِي صِفَةِ الجَنَّةِ وَنَعِيمِهَا

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حَمْزَةَ الزَّيَّاتِ، عَنْ زِيَادٍ الطَّائِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

قُلْنَا يَا رَسُولَ اللَّهِ: مَا لَنَا إِذَا كُنَّا عِنْدَكَ رَقَّتْ قُلُوبُنَا، وَزَهِدْنَا فِي الدُّنْيَا، وَكُنَّا مِنْ أَهْلِ الآخِرَةِ، فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِكَ فَآنَسْنَا أَهَالِينَا، وَشَمَمْنَا أَوْلَادَنَا أَنْكَرْنَا أَنْفُسَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّكُمْ تَكُونُونَ إِذَا خَرَجْتُمْ مِنْ عِنْدِي كُنْتُمْ عَلَى حَالِكُمْ ذَلِكَ لَزَارَتْكُمُ المَلَائِكَةُ فِي بُيُوتِكُمْ، وَلَوْ لَمْ تُذْنِبُوا لَجَاءَ اللَّهُ بِخَلْقٍ جَدِيدٍ كَيْ يُذْنِبُوا فَيَغْفِرَ لَهُمْ»

قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مِمَّ خُلِقَ الخَلْقُ؟ قَالَ: «مِنَ المَاءِ»، قُلْتُ: الْجَنَّةُ مَا بِنَاؤُهَا؟ قَالَ: «لَبِنَةٌ مِنْ فِضَّةٍ وَلَبِنَةٌ مِنْ ذَهَبٍ، وَمِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ، وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَاليَاقُوتُ، وَتُرْبَتُهَا الزَّعْفَرَانُ مَنْ دَخَلَهَا يَنْعَمُ وَلَا يَبْأَسُ، وَيَخْلُدُ وَلَا يَمُوتُ، لَا تَبْلَى ثِيَابُهُمْ، وَلَا يَفْنَى شَبَابُهُمْ»

ثُمَّ قَالَ: ” ثَلَاثٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ، الإِمَامُ العَادِلُ، وَالصَّائِمُ حِينَ يُفْطِرُ، وَدَعْوَةُ المَظْلُومِ يَرْفَعُهَا فَوْقَ الغَمَامِ، وَتُفَتَّحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ، وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ

«هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ القَوِيِّ وَلَيْسَ هُوَ عِنْدِي بِمُتَّصِلٍ» وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ بِإِسْنَادٍ آخَرَ عَنْ أَبِي مُدِلَّةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2526.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2462,
2463,
2464.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16238-ஸியாத் அத்தாஈ- (அல்லது ஸஅத் அத்தாஈ-அபூமுஜாஹித்…) யாரென அறியப்படாதவர் ஆவார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/349)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்த செய்தியின் மூன்றாவது பகுதி வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் புளைல் —> ஹம்ஸா அஸ்ஸய்யாத் —> ஸியாத் அத்தாஈ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க : திர்மிதீ-2526 ,

  • இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    (தனது ஸுஹ்த் என்ற நூலில்-1075) ஹம்ஸா அஸ்ஸய்யாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தியில் ஹம்ஸா அஸ்ஸய்யாத் —> ஸஅத் அத்தாஈ —> ஒரு மனிதர் —>  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) என்று அறிவிக்கிறார். இவர் முஹம்மது பின் புளைல் அவர்களை விட பலமானவர் என்பதால் இந்த அறிவிப்பாளர்தொடரையே ஆய்வில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே ஸியாத் அத்தாஈ (ஸஅத் அத்தாஈ) என்பவருக்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு மனிதர் கூறப்படுகிறார். திர்மிதீ அவர்கள் கூறும் இந்த அறிவிப்பில் அந்த மனிதர் கூறப்படவில்லை என்பதால் தான், திர்மிதீ அவர்கள் இது பலமான செய்தி அல்ல என்றும், இது சங்கிலிதொடராக உள்ள செய்தி அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.
  • மேலும் இந்த செய்தியை  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடமிருந்து அபூமுதில்லா என்பவரும் அறிவித்துள்ளார். (பார்க்க: திர்மிதீ-3598 )
  • (இவரே அந்த மனிதர் என்று தெரிகிறது). தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் அவர்களும் இவ்வாறே குறிப்பிடுகிறார். (நூல்: அல்இலலுல் வாரிதா 11/235). இதனடிப்படையில் மேற்கண்ட செய்தியில் ஸியாத் அத்தாஈ என்று கூறியிருப்பது தவறு என்று தெரிகிறது.

மேலும் பார்க்க: : திர்மிதீ-3598 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.