தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-2478

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரோஷம் இருவகை. அவற்றில்) அல்லாஹ் விரும்புகின்ற ரோஷமும் உண்டு. அல்லாஹ் வெறுக்கின்ற ரோஷமும் உண்டு. குழப்பம் விளைவதற்குரிய அறிகுறிகள் தோன்றுமிடத்தில் ரோஷம் கொள்வது அல்லாஹ் விரும்பும் ரோஷமாகும். குழப்பம் விளைவதற்குரிய அறிகுறிகளே இல்லாத இடத்தில் ரோஷம் கொள்வது அவன் வெறுக்கின்ற ரோஷமாகும்.

(பெருமையடித்தல் இருவகை. அவற்றில்) அல்லாஹ் வெறுக்கின்ற பெருமையும் உண்டு. அல்லாஹ் விரும்புகின்ற பெருமையும் உண்டு. அல்லாஹ் விரும்புகின்ற பெருமை யாதெனில் ஒரு மனிதன் போரிலும், தான தர்மம் செய்வதிலும் பெருமை கொள்வதாகும். அல்லாஹ் வெறுக்கின்ற பெருமை யாதெனில் ஒரு மனிதன் தீய செயலில் (அநியாயம் செய்வதில், பொருளாதாரத்தில், வமிசத்தில், அந்தஸ்தில்) பெருமை கொள்வதாகும்….

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ எவ்விதச் சந்தேகமுமின்றி) ஏற்றுக்கொள்ளப்படும்.

1 . ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை.

2 . பயணியின் பிரார்த்தனை.

3 . அநியாயம் செய்யப்பட்டவனின்  பிரார்த்தனை.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

(ibn-khuzaymah-2478: 2478)

بَابُ الرُّخْصَةِ فِي الْخُيَلَاءِ عِنْدَ الصَّدَقَةِ قَالَ أَبُو بَكْرٍ: «خَبَرُ ابْنِ عَتِيكٍ خَرَّجْتُهُ فِي كِتَابِ الْجِهَادِ»

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَامٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ الْأَزْرَقِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

غَيْرَتَانِ إِحْدَاهُمَا يُحِبُّهَا اللَّهُ، وَالْأُخْرَى يَبْغَضُهَا اللَّهُ: الْغَيْرَةُ فِي الرَّمْيَةِ يُحِبُّهَا اللَّهُ وَالْغَيْرَةُ فِي غَيْرِ رَمْيَةٍ يَبْغَضُهَا اللَّهُ، وَالْمَخِيلَةُ إِذَا تَصَدَّقَ الرَّجُلُ يُحِبُّهَا اللَّهُ، وَالْمَخِيلَةُ فِي الْكِبَرِ يَبْغَضُهَا اللَّهُ

وَقَالَ: «ثَلَاثَةٌ تُسْتَجَابُ دَعْوَتُهُمُ، الْوَالِدُ وَالْمُسَافِرُ وَالْمَظْلُومُ»


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-2478.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24527-அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அஸ்ரக் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்)

2 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20426 , அஹ்மத்-17398 , (17399 ) , இப்னு குஸைமா-2478 , அல்முஃஜமுல் கபீர்-939 , 940 , ஹாகிம்-1525 ,

  • மேற்கண்ட செய்தியில், முதல் பகுதியின் கருத்தில் வரும் செய்திகள் பார்க்க: அபூதாவூத்-2659 .
  • இரண்டாம் பகுதியின் கருத்தில் வரும் செய்திகள் பார்க்க: அபூதாவூத்-1536 .

மேலும் பார்க்க: அபூதாவூத்-1536 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.