பாடம்:
போரில் பெருமையடித்தல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரோஷம் இருவகை. அவற்றில்) அல்லாஹ் விரும்புகின்ற ரோஷமும் உண்டு. அல்லாஹ் வெறுக்கின்ற ரோஷமும் உண்டு. குழப்பம் விளைவதற்குரிய அறிகுறிகள் தோன்றுமிடத்தில் ரோஷம் கொள்வது அல்லாஹ் விரும்பும் ரோஷமாகும். குழப்பம் விளைவதற்குரிய அறிகுறிகளே இல்லாத இடத்தில் ரோஷம் கொள்வது அவன் வெறுக்கின்ற ரோஷமாகும்.
(பெருமையடித்தல் இருவகை. அவற்றில்) அல்லாஹ் வெறுக்கின்ற பெருமையும் உண்டு. அல்லாஹ் விரும்புகின்ற பெருமையும் உண்டு. அல்லாஹ் விரும்புகின்ற பெருமை யாதெனில் ஒரு மனிதன் போரிலும், தான தர்மம் செய்வதிலும் பெருமை கொள்வதாகும். அல்லாஹ் வெறுக்கின்ற பெருமை யாதெனில் ஒரு மனிதன் தீய செயலில் (அநியாயம் செய்வதில், பொருளாதாரத்தில், வமிசத்தில், அந்தஸ்தில்) பெருமை கொள்வதாகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அதீக் (ரலி)
(அபூதாவூத்: 2659)بَابٌ فِي الْخُيَلَاءِ فِي الْحَرْبِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، الْمَعْنَى وَاحِدٌ، قَالَا: حَدَّثَنَا أَبَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ ابْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، عَنْ جَابِرِ بْنِ عَتِيك، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ:
«مِنَ الْغَيْرَةِ مَا يُحِبُّ اللَّهُ وَمِنْهَا مَا يُبْغِضُ اللَّهُ، فَأَمَّا الَّتِي يُحِبُّهَا اللَّهُ فَالْغَيْرَةُ فِي الرِّيبَةِ، وَأَمَّا الْغَيْرَةُ الَّتِي يُبْغِضُهَا اللَّهُ فَالْغَيْرَةُ فِي غَيْرِ رِيبَةٍ، وَإِنَّ مِنَ الخُيَلَاءِ مَا يُبْغِضُ اللَّهُ، وَمِنْهَا مَا يُحِبُّ اللَّهُ، فَأَمَّا الْخُيَلَاءُ الَّتِي يُحِبُّ اللَّهُ فَاخْتِيَالُ الرَّجُلِ نَفْسَهُ عِنْدَ الْقِتَالِ، وَاخْتِيَالُهُ عِنْدَ الصَّدَقَةِ، وَأَمَّا الَّتِي يُبْغِضُ اللَّهُ فَاخْتِيَالُهُ فِي الْبَغْيِ»
قَالَ مُوسَى: «وَالْفَخْرِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2659.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2289.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21634-இப்னு ஜாபிர் பின் அதீக் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்த கருத்தில் வரும் செய்திகளில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்தியைத் தவிர மற்றவை பலவீனமாக உள்ளன.
1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அதீக் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-23747 , 23748 , 23750 , 23752 , தாரிமீ-2272 , அபூதாவூத்-2659 , நஸாயீ-2558 ,
2 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு குஸைமா-2478 .
3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1996 .
…….
சமீப விமர்சனங்கள்