தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1996

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரோஷம் இருவகை. அவற்றில்) அல்லாஹ் விரும்புகின்ற ரோஷமும் உண்டு. அல்லாஹ் வெறுக்கின்ற ரோஷமும் உண்டு.

குழப்பம் விளைவதற்குரிய அறிகுறிகள் தோன்றுமிடத்தில் ரோஷம் கொள்வது அல்லாஹ் விரும்பும் ரோஷமாகும்.

குழப்பம் விளைவதற்குரிய அறிகுறிகளே இல்லாத இடத்தில் ரோஷம் கொள்வது அவன் வெறுக்கின்ற ரோஷமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 1996)

بَابُ الْغَيْرَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَيْبَانَ أَبِي مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَهْمٍ – أَبِي شَهْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مِنَ الْغَيْرَةِ مَا يُحِبُّ اللَّهُ، وَمِنْهَا مَا يَكْرَهُ اللَّهُ، فَأَمَّا مَا يُحِبُّ اللَّهُ، فَالْغَيْرَةُ فِي الرِّيبَةِ، وَأَمَّا مَا يَكْرَهُ، فَالْغَيْرَةُ فِي غَيْرِ رِيبَةٍ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1996.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1986.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஸஹ்ம் என்பவர் அறியப்படாதவர் ஆவார். ஆனால் இந்த அறிவிப்பாளர்தொடரில் அபூஸஹ்ம் என்று இடம்பெற்றிருப்பது தவறு. அபூஸலமா என்பதே சரி என மிஸ்ஸீ அவர்கள் கூறியுள்ளார். ராவீ-24883-அபூஸலமா பலமானவர் ஆவார்.
  • இதில் வரும் பிரபலமான இமாம், யஹ்யா பின் அபூகஸீர் பலமானவர். என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இவ்வாறு முதலில் விமர்சித்தவர் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இமாம் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறுகிறார் . புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் இவர் அன்அனாவாக அறிவித்தவற்றை ஆதாரமாக ஏற்றுள்ளனர்…..
  • இவர் தத்லீஸ் செய்பவர் என்று வரும் விமர்சனங்களை ஆய்வு செய்து அபுஸ் ஸஹ்ரா என்பவர் தனி நூல் எழுதியுள்ளார். அதில் இவர் தத்லீஸ் செய்துள்ள செய்திகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்ற அறிஞர்கள் சரியானது எனக் கூறியுள்ளனர்.

3 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1996 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-2659 .

1 comment on Ibn-Majah-1996

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.