தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5304

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 49

(முஸ்லிம்: 5304)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ جَعْفَرٍ الْجَزَرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا لَذَهَبَ اللهُ بِكُمْ، وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللهَ فَيَغْفِرُ لَهُمْ»


Tamil-5304
Shamila-2749
JawamiulKalim-4942




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8082 , முஸ்லிம்-5304 , இப்னு மாஜா-4248 ,

.. ஹாகிம்-7622 ,

4 comments on Muslim-5304

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      மனிதர்கள் பாவம் செய்பவர்களே. வானவர்களைப் போன்று இறைக் கட்டளைக்கு மாறு செய்யாதவர்கள் அல்ல. ஆனால் பாவம் செய்தாலும் உடனடியாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். இதையே அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ்பின் பண்புகளில் ஒரு பண்பு அல்ஃகஃப்பார்-அதிகமாக மன்னிப்பவன். யாருமே பாவம் செய்யாவிட்டால் இந்த பண்பிற்கு வேலை இல்லாமல் போய்விடும் அல்லவா…

      மேலும் இதில் யார் வேண்டுமானாலும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்கலாம், இடைத்தரகர்கள் தேவை இல்லை என்று கருத்தும் உள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.