தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4282

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உலகம் முடிவதற்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்தாலும், அல்லாஹ் அந்த நாளை நீளமாக்கி, என் குடும்பத்தைச் சார்ந்த ஒரு மனிதரை அதில் அனுப்புவான். அவரது பெயர் என் பெயருடனும், அவரது தந்தையின் பெயர் என் தந்தையின் பெயருடனும் ஒத்துப்போகும். அவர் (இதற்கு முன்பு) பூமி அநியாயத்தாலும், அக்கிரமத்தாலும் நிரப்பப்பட்டிருந்ததைப் போன்று அப்போது அதை நீதியாலும், நேர்மையாலும் நிரப்புவார்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “என் குடும்பத்தைச் சார்ந்த; என் பெயருடன் அவரின் பெயர் ஒத்துப்போகும் ஒரு மனிதர் அரேபியாவின் ஆட்சியைக் கைப்பற்றும் வரை உலகம் அழியாது” என்று இடம்பெற்றுள்ளது.


 

(அபூதாவூத்: 4282)

حَدَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ عُمَرَ بْنَ عُبَيْدٍ، حَدَّثَهُمْ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ يَعْنِي ابْنَ عَيَّاشٍ، ح وحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، ح وحَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا زَائِدَةُ، ح وحَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ فِطْرٍ، الْمَعْنَى وَاحِدٌ، كُلُّهُمْ عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَوْ لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلَّا يَوْمٌ» – قَالَ زَائِدَةُ فِي حَدِيثِهِ: «لَطَوَّلَ اللَّهُ ذَلِكَ الْيَوْمَ»، ثُمَّ اتَّفَقُوا – «حَتَّى يَبْعَثَ فِيهِ رَجُلًا مِنِّي» – أَوْ «مِنْ أَهْلِ بَيْتِي» – يُوَاطِئُ اسْمُهُ اسْمِي، وَاسْمُ أَبِيهِ اسْمُ أَبِي “

زَادَ فِي حَدِيثِ فِطْرٍ: «يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا، وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا»

وَقَالَ: فِي حَدِيثِ سُفْيَانَ: «لَا تَذْهَبُ، أَوْ لَا تَنْقَضِي، الدُّنْيَا حَتَّى يَمْلِكَ الْعَرَبَ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي، يُوَاطِئُ اسْمُهُ اسْمِي»

قَالَ أَبُو دَاوُدَ: «لَفْظُ عُمَرَ وَأَبِي بَكْرٍ بِمَعْنَى سُفْيَانَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4282.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


 

…ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா- ஆஸிம் பின் அபுன் நஜூத்…


2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஆஸிம்—> ஸிர்ரு பின் ஹுபைஷ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37647, அஹ்மத்-3571, 3572, 3573, 4098, 4279, அபூதாவூத்-4282, திர்மிதீ-2230, முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-,


  • ஆஸிம் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: திர்மிதீ-2231,


 


மேலும் பார்க்க: அபூதாவூத்-4285.

1 comment on Abu-Dawood-4282

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.