பாடம்:
ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காக நாடு துறந்து செல்வது) முடிவடைந்து விட்டதா?
பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)
(அபூதாவூத்: 2479)بَابٌ فِي الْهِجْرَةِ هَلِ انْقَطَعَتْ؟
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَوْفٍ، عَنْ أَبِي هِنْدٍ، عَنْ مُعَاوِيَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ، وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2479.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2123.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2712-அபூஹிந்த் என்பவர் பற்றி அஸ்கரீ என்பவர், இவர் நபித்தோழர் என்று கூறியுள்ளார். என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)இவர் தாபிஈ என்று கூறுகிறார். அப்துல் ஹக் அவர்கள், இவர் பிரபல்யமானவர் அல்ல என்றும், இப்னுல் கத்தான் அவர்கள் இவர் அறியப்படாதவர் என்றும் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மக்பூல் என்ற தரத்தில் சேர்த்துள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/603, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/1219)
இவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் முஆவியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-16906 , தாரிமீ-2555 , அபூதாவூத்-2479 , குப்ரா நஸாயீ-8658 , முஸ்னத் அபீ யஃலா-7371 , அல்முஃஜமுல் கபீர்-907 , குப்ரா பைஹகீ-17778 ,
மேலும் பார்க்க: நஸாயீ-4172 .
சமீப விமர்சனங்கள்