தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19473

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகம்குப்புற படுத்துக்கிடந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “இவர் தான் தூங்குபவர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியவர் ஆவார்” என்று கூறினார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 19473)

حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا زَكَرِيَّا، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، أَنَّهُ سَمِعَ عَمْرَو بْنَ الشَّرِيدِ، يَقُولُ:

 بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ رَاقِدٌ عَلَى وَجْهِهِ، فَقَالَ: «هَذَا أَبْغَضُ الرُّقَادِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18654.
Musnad-Ahmad-Shamila-19473.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19037.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் அஷ்ஷரீத் அவர்கள் இந்த செய்தி நமக்கு கிடைத்தது என்று தான் கூறியுள்ளார். மேலும் இவர் நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார்.
  • இவரைப் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்கள், இவர் தாபிஈ என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/277)

  • இடையில் நபித்தோழர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது முர்ஸலான செய்தியாகும்.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

6 . இந்தக் கருத்தில் அம்ர் பின் ஷரீத் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-19473 , 19458 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2768 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.