அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகம்குப்புற படுத்துக்கிடந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “இவர் தான் தூங்குபவர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியவர் ஆவார்” என்று கூறினார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 19473)حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا زَكَرِيَّا، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، أَنَّهُ سَمِعَ عَمْرَو بْنَ الشَّرِيدِ، يَقُولُ:
بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ رَاقِدٌ عَلَى وَجْهِهِ، فَقَالَ: «هَذَا أَبْغَضُ الرُّقَادِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18654.
Musnad-Ahmad-Shamila-19473.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19037.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் அஷ்ஷரீத் அவர்கள் இந்த செய்தி நமக்கு கிடைத்தது என்று தான் கூறியுள்ளார். மேலும் இவர் நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார்.
- இவரைப் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்கள், இவர் தாபிஈ என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/277)
- இடையில் நபித்தோழர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது முர்ஸலான செய்தியாகும்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
6 . இந்தக் கருத்தில் அம்ர் பின் ஷரீத் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-19473 , 19458 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2768 .
சமீப விமர்சனங்கள்