தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1331

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

…ஜனாஸாத் தொழுகையில் இமாம் தக்பீர் கூற வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துக் கூற வேண்டும். பிறகு (தொழுகையை) நிறைவுசெய்யும் போது மெதுவாக ஒரு சலாம் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் சொன்னதாக அபூஉமாமா அறிவிக்கிறார். இமாம் செய்வது போல் பின்பற்றுபவரும் செய்வது நபிவழியாகும் எனவும் கூறுகிறார்.

அறிவிப்பவர்கள்: அபூஉமாமா (ரலி) , ஹபீப் பின் மஸ்லமா (ரலி)

(ஹாகிம்: 1331)

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَحْمَدَ التَّاجِرُ، ثنا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْعَسْقَلَانِيُّ، ثنا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، ثنا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ،

وَكَانَ مِنْ كُبَرَاءِ الْأَنْصَارِ وَعُلَمَائِهِمْ، وَأَبْنَاءِ الَّذِينَ شَهِدُوا بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَهُ رِجَالٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ، «أَنْ يُكَبِّرَ الْإِمَامُ، ثُمَّ يُصَلِّيَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيُخْلِصَ الصَّلَاةَ فِي التَّكْبِيرَاتِ الثَّلَاثِ، ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمًا خَفِيًّا حِينَ يَنْصَرِفُ، وَالسُّنَّةُ أَنْ يَفْعَلَ مِنْ وَرَائِهِ مِثْلَ مَا فَعَلَ أَمَامَهُ»

قَالَ الزُّهْرِيُّ: حَدَّثَنِي بِذَلِكَ أَبُو أُمَامَةَ، وَابْنُ الْمُسَيِّبِ يَسْمَعُ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ

قَالَ ابْنُ شِهَابٍ: فَذَكَرْتُ الَّذِي أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ مِنَ السُّنَّةِ فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ لِمُحَمَّدِ بْنِ سُوَيْدٍ، قَالَ: وَأَنَا سَمِعْتُ الضَّحَّاكَ بْنَ قَيْسٍ يُحَدِّثُ، عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ فِي صَلَاةٍ صَلَّاهَا عَلَى الْمَيِّتِ مِثْلَ الَّذِي حَدَّثَنَا أَبُو أُمَامَةَ

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخَرِّجَاهُ، وَلَيْسَ فِي التَّسْلِيمَةِ الْوَاحِدَةِ عَلَى الْجِنَازَةِ أَصَحُّ مِنْهُ، وَشَاهِدُهُ حَدِيثُ أَبِي الْعَنْبَسِ سَعِيدِ بْنِ كَثِيرٍ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-1264.
Hakim-Shamila-1331.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1263.




  • ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுப்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்களில் இதுதான் மிகச் சரியானது என்று அந்தக் கருத்துடையவர்கள் கூறுகின்றனர். இது ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறப்படவில்லை. நபித்தோழர்கள் கூற்றாகவே இது பதிவு செய்யப்பட்டுள்ளது…

மேலும் பார்க்க: நஸாயீ-1989அல்முஃஜமுல் கபீர்-10022 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.