தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21297

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் கையை பிடித்து கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “எனது சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜாலை விட தஜ்ஜால் அல்லாதவர்கள் என்னை அதிகம் பயம்கொள்ளச் செய்கின்றனர் என்று கூறியதை செவியேற்றேன்.

நான் வீட்டை அடைந்தபின் உள்ளே செல்ல பயந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜாலை விட உங்களை அதிகம் பயம்கொள்ளச் செய்தது எது? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், “வழிகெடுக்கும் தலைவர்கள் தான்” என்று பதிலளித்தார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 21297)

حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةُ، عَنِ ابْنِ هُبَيْرَةَ، عَنْ أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا ذَرٍّ، يَقُولُ:

كُنْتُ مُخَاصِرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا إِلَى مَنْزِلِهِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُ عَلَى أُمَّتِي مِنَ الدَّجَّالِ» فَلَمَّا خَشِيتُ أَنْ يَدْخُلَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ شَيْءٍ أَخْوَفُ عَلَى أُمَّتِكَ مِنَ الدَّجَّالِ؟ قَالَ: «الْأَئِمَّةَ الْمُضِلِّينَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21297.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20780.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். சிலர், குறிப்பிட்ட சில அறிவிப்பாளர்கள் இப்னு லஹீஆ விடமிருந்து அறிவித்தால் அவை சரியானது எனக் கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க: அஹ்மத்-21296 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.