அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நானும் கரிந்து போன முகத்துடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இரு விரல்களைப் போன்று இருப்போம்”.
யஸீத் இப்னு ஸரீஉ (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைக் கூறிய போது தம் நடுவிரலையும், சுட்டு விரலையும் இணைத்து சுட்டிக்காட்டினார்கள்.
(கரிந்து போன முகத்துடைய பெண் – அதாவது, தன் கணவனை இழந்து விட்ட, குடும்பப் பாரம்பரியமும் நல்ல அழகும் இருந்து, இறந்து விட்ட கணவனின் குழந்தைகளுக்காக அவர்கள் தன்னை விட்டுப் பிரியும் வரை அல்லது இறந்து விடும் வரை திருமணம் செய்து கொள்ளாமலிருக்கும் பெண்)
அறிவிப்பவர்: அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி)
(அபூதாவூத்: 5149)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا النَّهَّاسُ بْنُ قَهْمٍ، قَالَ: حَدَّثَنِي شَدَّادٌ أَبُو عَمَّارٍ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَنَا وَامْرَأَةٌ سَفْعَاءُ الْخَدَّيْنِ كَهَاتَيْنِ يَوْمَ الْقِيَامَةِ» وَأَوْمَأَ يَزِيدُ بِالْوُسْطَى وَالسَّبَّابَةِ
«امْرَأَةٌ آمَتْ مِنْ زَوْجِهَا ذَاتُ مَنْصِبٍ، وَجَمَالٍ، حَبَسَتْ نَفْسَهَا عَلَى يَتَامَاهَا حَتَّى بَانُوا أَوْ مَاتُوا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-5149.
Abu-Dawood-Shamila-5149.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4484.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46718-நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவர் பற்றி, இமாம் யஹ்யா அல்கத்தான், இமாம் இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸயீ, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் இவர் பலவீனமானவர் என விமர்சனம் செய்துள்ளனர். - இமாம் இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இவர் பலமானவர்களின் ஹதீஸ்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர். அதனால் இவரின் ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்ககூடாது என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/243)
- மேலும் ஷத்தாத் அபூஅம்மார் அவர்கள் அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) ஆகியோரிடமிருந்து எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்று இமாம் ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுல் கமால்-12/399)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-24006 , 24008 , அல்அதபுல் முஃப்ரத்-141 , அபூதாவூத்-5149 , அல்முஃஜமுல் கபீர்-103 ,
சமீப விமர்சனங்கள்