தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-694

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

பேசிக்கொண்டோ தூங்கிக் கொண்டோ இருப்பவருக்கு பின்னால் (இருந்து) தொழுவது.

முஹம்மது பின் கஅப் அல்குரளீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை தூங்குபவனுக்குப் பின்னால் உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் தொழுவதைப் பார்த்தேன்). உடனே நான் அவர்களிடம், “தூங்குபவனுக்குப் பின்னாலும், பேசிக்கொண்டிருப்பவனுக்குப் பின்னாலும் தொழ வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த செய்தியை கூறினேன்.

(அபூதாவூத்: 694)

بَابُ الصَّلَاةِ إِلَى الْمُتَحَدِّثِينَ وَالنِّيَامِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدِ بْنِ أَيْمَنَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ، عَمَّنْ حَدَّثَهُ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، قَالَ: قُلْتُ لَهُ: يَعْنِي لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تُصَلُّوا خَلْفَ النَّائِمِ وَلَا الْمُتَحَدِّثِ»


Abu-Dawood-Tamil-595.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-694.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-594.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் முஹம்மது பின் கஅப் அல்குரளீ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மனிதர் யார் என்ற விவரம் இல்லை. மேலும் இதில் வரும் அப்துல்மலிக், அப்துல்லாஹ் பின் யஃகூப் ஆகியோர் அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே உள்ளன. இந்த செய்தியின் கருத்துக்கு மாற்றமான சரியான ஹதீஸ்கள் உள்ளன.

(பார்க்க: புகாரி-384)

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-959 , அபூதாவூத்-694 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1485 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.