அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுவர்களை திரைகளால் மறைக்காதீர்கள். தனது சகோதரனின் கடிதத்தை அவரின் அனுமதியின்றி பார்(த்து படி)ப்பவர் நரகத்தையே பார்க்கிறார்.
நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டும் போது உங்களது உள்ளங்கைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். உங்களது கைகளின் மேற்புறத்தைக் கொண்டு அவனிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள். பிரார்த்தனை செய்த பின் கைகளை முகத்தில் தடவுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(அபூதாவூத்: 1485)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدِ بْنِ أَيْمَنَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ، عَمَّنْ حَدَّثَهُ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تَسْتُرُوا الْجُدُرَ مَنْ نَظَرَ فِي كِتَابِ أَخِيهِ بِغَيْرِ إِذْنِهِ، فَإِنَّمَا يَنْظُرُ فِي النَّارِ، سَلُوا اللَّهَ بِبُطُونِ أَكُفِّكُمْ، وَلَا تَسْأَلُوهُ بِظُهُورِهَا، فَإِذَا فَرَغْتُمْ، فَامْسَحُوا بِهَا وُجُوهَكُمْ»
قَالَ أَبُو دَاوُدَ: «رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ كُلُّهَا وَاهِيَةٌ، وَهَذَا الطَّرِيقُ أَمْثَلُهَا وَهُوَ ضَعِيفٌ أَيْضًا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1485.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1272.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26617-அப்துல் மலிக், ராவீ-26300-அப்துல்லாஹ் பின் யஃகூப் போன்றோர் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- மேலும் முஹம்மது பின் கஅப் அவரிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் கூறப்படவில்லை என்பதால் அவர் அறியப்படாதவர் ஆவார்.
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-1486 .
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : இப்னு மாஜா-1181 , 3866 , அபூதாவூத்-1485 , ஹாகிம்-1968 , 7706 , 7707 ,
2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.பின் யஸார் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1486 .
இதனுடன் தொடர்புள்ள செய்தி:
பார்க்க: அபூதாவூத்-694 , அபூதாவூத்-1489 ,
சமீப விமர்சனங்கள்