தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-598

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியானத் தொழுகைகள் எவ்வாறு இருந்தன?

ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் பகல் நேர (உபரித்) தொழுகை பற்றி அலி (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அப்போது அவர்கள், ‘அதற்கு உங்களால் இயலாது’ என்று கூறினார்கள். (அதற்கு) நாங்கள், ‘எங்களில் எவருக்கு இயலுமோ அவர் (அதைச் செய்யட்டும்)’ என்று கூறினோம்.

அதற்கு அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் அஸர் தொழுகையின் போது (மேற்குத் திசையில்) இருப்பது போன்று இருக்கும்போது (சூரிய உதயத்திற்கு பின்பு), நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

சூரியன் லுஹர் தொழுகையின் போது (நடுவானில்) இருப்பது போன்று இருக்கும்போது நான்கு ரக்அத்கள் (லுஹாத்) தொழுவார்கள்.

லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களும், அதற்குப் பின் இரண்டு ரக்அத்களும், அஸருக்கு முன் நான்கு ரக்அத்களும் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் நெருக்கமான வானவர்கள், இறைத்தூதர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு ஸலாம் கூறிப் பிரிப்பார்கள்.

(திர்மிதி: 598)

بَابُ كَيْفَ كَانَ تَطَوُّعُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، قَالَ:

سَأَلْنَا عَلِيًّا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النَّهَارِ؟ فَقَالَ: إِنَّكُمْ لَا تُطِيقُونَ ذَاكَ، فَقُلْنَا: مَنْ أَطَاقَ ذَاكَ مِنَّا، فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ العَصْرِ صَلَّى رَكْعَتَيْنِ، وَإِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ الظُّهْرِ صَلَّى أَرْبَعًا، وَصَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَقَبْلَ العَصْرِ أَرْبَعًا، يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى المَلَائِكَةِ المُقَرَّبِينَ، وَالنَّبِيِّينَ، وَالمُرْسَلِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُؤْمِنِينَ، وَالمُسْلِمِينَ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-544.
Tirmidhi-Shamila-598.
Tirmidhi-Alamiah-544.
Tirmidhi-JawamiulKalim-544.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . மஹ்மூத் பின் ஃகைலான்

3 . வஹ்ப் பின் ஜரீர்

4 . ஷுஅபா

5 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

6 . ஆஸிம் பின் ளம்ரா

7 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


மேலும் பார்க்க: அஹ்மத்-650.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.