தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1149

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இருபெருநாள் தொழுகையின் (கூடுதல்) தக்பீர்கள்.

நோன்பு பெருநாள், உள்ஹியா பெருநாள் தொழுகைகளில் முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(அபூதாவூத்: 1149)

بَابُ التَّكْبِيرِ فِي الْعِيدَيْنِ

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ،

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْفِطْرِ وَالْأَضْحَى، فِي الْأُولَى سَبْعَ تَكْبِيرَاتٍ، وَفِي الثَّانِيَةِ خَمْسًا»،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1149.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-972.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ நினைவாற்றல் சரியில்லாதவர், மூளை குழம்பியவர் என்ற அடிப்படையில் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். என்றாலும் சில அறிவிப்பாளர்கள் (இப்னு லஹீஆ மூளை குழம்புவதற்கு முன் அவரிடமிருந்து ஹதீஸை கேட்டு அறிவித்திருப்பதால் அவர்கள்) அறிவிக்கும் செய்திகளை ஹதீஸ்கலை அறிஞர்கள் சரியானது எனக் கூறியுள்ளனர். அதனடிப்படையில் அப்துல்லாஹ் பின் வஹ்ப், அப்துல்லாஹ் பின் யஸீத், அப்துல்லாஹ் பின் முபாரக் போன்றோர் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது.
  • அவ்வாறே குதைபா பின் ஸயீத், (இன்னும் சிலரும்) இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது. காரணம், நான் இப்னு லஹீஆ வின் ஹதீஸ்களை இப்னு வஹ்பின் நூல்களிலிருந்தும், இப்னு லஹீஆவின் சகோதரரின் மகனின் நூல்களிலிருந்தும் தான் எடுத்தெழுதி பின்பு அவரிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். அஃரஜின் ஹதீஸ்களைத் தவிர, என்று குதைபா பின் ஸயீத் கூறியுள்ளார்.

(நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512).

  • மேலும் இந்த செய்தியை இப்னு லஹீஆவிடமிருந்து அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களும் அறிவித்துள்ளார். (பார்க்க: இப்னு மாஜா-1280 )
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இந்த தகவலை கூறி இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: ஸஹீஹ் அபூதாவூத்-1043)

என்றாலும் இந்த செய்தியில் இப்னு லஹீஆ அறிவிப்பாளர்தொடரில் குளறுபடியாக அறிவித்துள்ளார் என்று புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3458, …)

2 . இந்தக் கருத்தில் ஆயிஷா  (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24362 , 24409 , இப்னு மாஜா-1280 , அபூதாவூத்-1149 , 1150 , …

சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-1151 .

3 comments on Abu-Dawood-1149

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.

    2. அபூதாவூத்-1151 பார்க்கவும்

      வேறு அறிவிப்பாளர் தொடரில் இந்த செய்தி பலமான செய்தி

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.