பாடம்:
(ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) திருநங்கைகளைப் பற்றிய சட்டம்.
நபி (ஸல்) அவர்களிடம், கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசியிருந்த ஒரு மனிதர் (திருநங்கை) கொண்டு வரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், “இவரின் விசயம் என்ன? என்று கேட்டார்கள். இவர் பெண்களைப் போன்று நடந்துக் கொள்கிறார் என்று அவர்களிடம் கூறப்பட்டது. எனவே நபி (ஸல்) அவர்கள், அவரை நகீஃ என்ற இடத்திற்கு நாடு கடத்துமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாம் அவரைக் கொல்ல வேண்டாமா? என்று கேட்க, “தொழுவோரைக் கொல்ல நான் தடுக்கப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸாமா அவர்கள், நகீஃ என்பது மதீனாவின் அருகிலுள்ள ஒரு இடமாகும். பகீஃ (என்ற பொது மையவாடி) அல்ல என்று கூறினார்.
(அபூதாவூத்: 4928)بَابٌ فِي الْحُكْمِ فِي الْمُخَنَّثِينَ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَنَّ أَبَا أُسَامَةَ، أَخْبَرَهُمْ عَنْ مُفَضَّلِ بْنِ يُونُسَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ أَبِي يَسَارٍ الْقُرَشِيِّ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمُخَنَّثٍ قَدْ خَضَّبَ يَدَيْهِ وَرِجْلَيْهِ بِالْحِنَّاءِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ هَذَا؟» فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، يَتَشَبَّهُ بِالنِّسَاءِ، فَأَمَرَ بِهِ فَنُفِيَ إِلَى النَّقِيعِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَقْتُلُهُ؟ فَقَالَ: «إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ»
قَالَ أَبُو أُسَامَةَ: «وَالنَّقِيعُ نَاحِيَةٌ عَنِ الْمَدِينَةِ وَلَيْسَ بِالْبَقِيعِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4280.
Abu-Dawood-Shamila-4928.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4282.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2695-அபூஹாஷிம் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்த செய்தியை பற்றி, அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் அபூதாவூதின் தஃலீகில் சரியானது எனக் குறிப்பிட்டாலும் தர்கீபில்-1260 எண்ணில் முன்கரான செய்தி என்று கூறியுள்ளார்.
சமீப விமர்சனங்கள்