தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2488

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரகத்திற்கு தடைசெய்யப்பட்ட ஒருவரைப் பற்றி, அல்லது எவருக்கு நரகம் தடைசெய்யப்பட்டதோ அவரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டுவிட்டு, (அவர் யாரெனில்) அவர் மக்களை நெருங்கியிருப்பார்; பணிவுள்ளவராக இருப்பார்; மென்மையானவராக இருப்பார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(திர்மிதி: 2488)

بَابٌ

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو الأَوْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ أَوْ بِمَنْ تَحْرُمُ عَلَيْهِ النَّارُ، عَلَى كُلِّ قَرِيبٍ هَيِّنٍ سَهْلٍ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2488.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2425.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25226-அப்துல்லாஹ் பின் அம்ர் அல்அவ்திய்யி என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் அவர் இடம்பெறும் இந்த செய்தியை இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/395, தக்ரீபுத் தஹ்தீப்-1/531)

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளதாலும், இவரிடமிருந்து மூஸா பின் உக்பா மட்டுமே அறிவித்திருப்பதாலும் இவர் அறியப்படாதவர் என்ற வகையில் சேருவார்.

மேலும் மூஸா பின் உக்பா பலமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்று விமர்சனமும் உள்ளது…

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், இந்தக் கருத்தில் முஐகீப் பின் அபூஃபாத்திமா (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகளின் மூலம் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-938)

  • ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள், ஷாஹித்கள் மூலம் (அதாவது இந்தக் கருத்தில் மற்ற நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகளின் மூலம்) ஹஸன் என்று கூறியுள்ளார்.
  • திர்மிதீ அவர்கள் இந்த செய்தியை ஹஸன் கரீப் என்று கூறியுள்ளார். இதன் பொருள் ஹஸனுன் லிதாதிஹீ என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் அவ்வாறே கூறியுள்ளார். மேலும் திர்மிதீ இமாம் ஹஸன் என்று கூறினால் அதன் பொருள் ஹஸனுன் லிகைரிஹீ என்பதைக் குறிக்கும். (ஹஸனுன் லிகைரிஹீ என்ற தரத்தில் உள்ள செய்தியை நாம் ஆதாரமாக ஏற்பதில்லை)

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மூஸா பின் உக்பா —> அப்துல்லாஹ் பின் அம்ர் அல்அவ்திய்யி—> இப்னு மஸ்வூத் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-3938 , திர்மிதீ-2488 , முஸ்னத் அபீ யஃலா-5053 , இப்னு ஹிப்பான்-469 , 470 , அல்முஃஜமுல் கபீர்-10562 ,

  • அம்ர் பின் அபூஅம்ர் —> ஒரு மனிதர் —> இப்னு மஸ்வூத் (ரலி) 

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-5060 ,

2 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1853 .

3 . முஐகீப் பின் அபூஃபாத்திமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-832 .

4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5725 .

5 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8256 .

ஆய்வுக்காக: أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ .

8 comments on Tirmidhi-2488

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜவாமிஉல் கலிமில் அறிவிப்பாளர் பற்றிய குறிப்பில் அப்துல்லாஹ் பின் அம்ர் அல்அவ்திய்யி என்பது அம்ர் பின் மைமூன் அல்அவ்திய்யி என்று இடம்பெற்றுள்ளது. இது தவறாகும். இவரைத் தான் இப்னு மயீன் போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்த செய்தியை ஹஸன் என்று முடிவு செய்யலாம். அல்லது அனைத்தும் பலவீனம் என்று முடிவு செய்து ஹஸனுன் லிகைரிஹீ என்று முடிவு செய்யலாம். (இது நம்மிடம் ஆதாரத்திற்கேற்ற செய்தி அல்ல)

      குப்ரா பைஹகீ-20806 இடம்பெறும் செய்தியிலும், இன்னும் இங்கு பதிவு செய்யாத வேறு சில நூல்களில் இடம்பெறும் செய்திகளிலும் குறையில்லை என்றால் ஹஸன்தரம் என்று முடிவு செய்யலாம். எனவே இதில் சரியான முடிவு எடுக்கும் வரை இது ஆய்வில் உள்ள செய்திதான்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.