தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Akhbar-Asbahan-116

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் அதில் தங்குவோருக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(akhbar-asbahan-116: 116)

أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ الْجَوْهَرِيُّ أَبُو الْعَبَّاسِ يُعْرَفُ بِحَمَّوَيْهِ الثَّقَفِيِّ تُوُفِّيَ سَنَةَ ثَلَاثِمِائَةٍ نَزَلَ الْمَدِينَةَ، رَوَى عَنْ أَبِي مَرْوَانَ الْعُثْمَانِيِّ، وَإِسْمَاعِيلَ بْنِ زُرَارَةَ، وَابْنِ أَبِي رِزْمَةَ، وَلُوَيْنٍ

حَدَّثَنَا الْقَاضِي أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ إِبْرَاهِيمَ، ثنا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ الثَّقَفِيُّ وَيُعْرَفُ بِحَمَّوَيْهِ الْجَوْهَرِيِّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ الْعَابِدِيُّ، ثنا يُوسُفُ بْنُ الْفَيْضِ الشَّامِيُّ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ لِلَّهَ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ، تَنْزِلُ عَلَى هَذَا الْبَيْتِ، سِتُّونَ لِلطَّائِفِينَ، وَأَرْبَعُونَ لِلْمُصَلِّينَ، وَعِشْرُونَ لِلنَّاظِرِينَ»


Akhbar-Asbahan-Tamil-.
Akhbar-Asbahan-TamilMisc-365.
Akhbar-Asbahan-Shamila-116.
Akhbar-Asbahan-Alamiah-.
Akhbar-Asbahan-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ யூசுப் பின் ஃபைள் என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    ஆகியோர் கூறியுள்ளனர். துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார். மேலும் பல அறிஞர்கள் இவரை விமர்சித்துள்ளனர்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/497, அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/223, லிஸானுல் மீஸான்-8/556)

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11248 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.