ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 2386)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُوسُفَ الْعَرْعَرِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ قَالَ: حَدَّثَنَا الْعُمَرِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2386.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2379.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-4486-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ் யாரென அறியப்படாதவர் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும், இவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களும் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/32, தக்ரீபுத் தஹ்தீப்-1/93)
இவரிடமிருந்து இப்னு மாஜா அவர்களும் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும் இந்த ஒரு செய்தி மட்டுமே அறிவித்துள்ளார்.
- மேலும் இதில் வரும் ராவீ-25179-உமரிய்யு (என்ற சின்ன) இப்னு உமர் என்பவர் நல்ல மனிதர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/388)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் ஸைத் பின் அஸ்லம் அவர்கள் தனது தந்தை வழியாக அறிவித்துள்ள-இப்னு மாஜா-2390 இல் வந்துள்ள-செய்தியே சரியானதாகும்.
மேலும் பார்க்க: புகாரி-2589 .
சமீப விமர்சனங்கள்