அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டு நாள் விருந்து கொடுப்பது (ஸுன்னத்) நபிவழியாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமாகும்.
யார் விளம்பரத்திற்காக செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10332)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ خَالَوَيْهِ الْوَاسِطِيُّ، ثنا سَهْلُ بْنُ عُثْمَانَ، ثنا زِيَادُ بْنُ عَبْدِ اللهِ الْبَكَّائِيُّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«طَعَامُ يَوْمٍ حَقٌّ، وَطَعَامُ يَوْمَيْنِ سُنَّةٌ، وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ، وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10332.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10183.
- இந்த செய்தியை ஸியாத் பின் அப்துல்லாஹ் தனித்து அறிவிக்கிறார் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியதை குறிப்பிட்டு விட்டு, இவரை ஆதாரமாக ஏற்கலாமா? கூடாதா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது என்றும், இவர் அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து செவியேற்றது அதாஉ மூளை குழம்பிய பின்பே என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறியுள்ளார்.
(நூல்: அத்தல்கீஸுல் ஹபீர்-1560)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1097 .
சமீப விமர்சனங்கள்